Subscribe Us

header ads

ஓஷோ , ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் ஏன் நான் நான் ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன் ?*

❓🤔❓🤔❓🤔❓❓🤔⁉️

*கேள்வி.*

*ஓஷோ , ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் ஏன் நான் நான் ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன் ?*

*#ஓஷோபதில்*

 " நீங்கள் பார்த்தாலும் , பார்க்க முடியாவிட்டாலும் ஒரு பெண் அம்மணமாகத்தான் இருக்கிறாள் , நடக்கிறாள் , சிரிக்கிறாள். 

உடைக்குள் அம்மணமே ....

உடை மனித வர்க்கத்தின் கற்பனை ....

அது எதனால் தோன்றியதோ தெரியாது.

 நீங்கள் பூனை , நாய் , சிங்கம் , புலி போன்ற மிருகங்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறீர்களா ?

 இல்லை அல்லவா ? 

ஏனென்றால் அவை இயற்கையாக இருக்கின்றன ! 

ஒருமரம் அம்மணமாக நிற்கிறது .

 அதற்கு ஒரு நாள் புடவை சுற்றிப் பாருங்கள் ! 

சில நாட்கள் கழித்து , அம்மணமான மரங்களின் படங்கள் ரகசியமாக வெளியிடப்படும் !

அதை பைபிளுக்கு இடையில் வைத்து ( எந்த மத நூலுக்கும் இடையில் வைத்து ) ரகசியமாகப் பார்த்து ரசிப்பார்கள் 😁😁😁

 முயற்சி செய்து பாருங்கள் புரியும் !

 இங்கிலாந்தில் சிலர் தன் பெண் நாய்களின் அந்தரங்க உறுப்புகளை மூடி வெளியே அழைத்துச் செல்கிறார்களாம் !

 என்ன நாகரீகம் !

பெட்ரண்ட் ரஸ்ஸல் ( Betrand Russell ) தன்னுடைய சுய சரிதத்தில் , ' என்னுடைய குழந்தைப் பருவ காலத்தில் ( அது விக்டோரியா காலம் ) நாற்காலியின் கால்களுக்குக்கூட , துணி தைத்து மூடி வைத்தார்கள் ! 

ஏனென்றால் அது ஆண்குறியை ஞாபகப் படுத்துகிறதாம் ! ' என்று எழுதுகிறார் .

மனிதன் இயற்கையாக இருந்தால் இந்த ஆபாசப் படங்கள் மறைந்துவிடும் .

 பழங்குடியினர் இப்படித்தான் இருந்தார்கள் . 

அவர்களுக்கு இயற்கையான பாலியல் உந்துதல் ஏற்படும் பொழுது அந்த உணர்ச்சி ஏற்படும் .

 இதற்கும் ஒரு வழி இருக்கிறது , ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் , நன்றாக கலந்து பேசி , வீட்டில் இருக்கும்பொழுது மட்டும் கூடியவரை அம்மணமாக இருக்கலாம் ! 

முதலில் குறைந்தது ஒரு மணிநேரம் .

 இது ஆரம்பத்தில் மிகுந்த சங்கடத்தையும் , வெட்கத்தையும் கொடுக்கும் . 

பிறர் என்ன நினைப்பார்கள் என்ற குற்ற உணர்வும் ஏற்படும் . 

போகப்போக இந்த அற்ப ஆசைகள் , கவர்ச்சிகள் எல்லாம் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும் .

 ஒரு கட்டத்தில் அதைப் பார்க்க வெறுப்புக்கூட ஏற்படலாம் ! 

தாய் தகப்பனார் அம்மணமாக இருக்கும்பொழுது பிள்ளைகள் அம்மணமாக ஓடியாடி விளையாடலாமே 

இதற்கு ஏன் இவ்வளவு ஆவல் 

இயற்கை நம்மை மயக்கி வைத்திருக்கிறது - 

மனிதனால் உண்மையை அறிய முடியவில்லை . சிந்திக்க முடியவில்லை .

ஆங்கில வார்த்தையான ' Fasication ' ( கவர்ச்சி - ஆர்வம் ) என்பது ' Phallva ' என்ற வார்தையிலிருந்து வந்தது .

 இதன் அர்த்தம் உடலுறுவு உறுப்பின் தோற்றம் ' என்பது . 

இந்த வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாகிய ' Phala ' என்ற வார்த்தையிலிருந்து வந்தது . 

மனிதனின் பிரக்ஞையற்ற மனதில் அது பொக்கிஷமாகப் பதிந்துவிட்டது !

 ஏனெனில் அது கொடுக்கும் இன்பம் அப்படி ! 

மனித உடம்பில் அதைப்போல வேறு எந்த உறுப்பும் இன்பம் கொடுப்பதில்லை ! 

ஆகவேதான் மனிதன் அதை எப்பொழுதும் மூடிவைத்துப் பாதுகாக்க நினைத்தான் .

 கற்காலத்தில் அதை இலைகளால் வைத்து மூடினான் . 

பிற்பாடு ஆண் கற்பு , உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை விதித்து பெண்களை அடிமையாக்கிவிட்டான் .

எப்படியோ பெண்ணினம் அடிமைப்பட்டு இப்பொழுது சுதந்திரகாற்றை சுவாசிக்கிறது !

 இனி வருங்காலம் பெண்களுக்கு உரியதுதான் ! 

இப்பொழுதே அதன் அறிகுறி தெரிய ஆரம்பித்துவிட்டது ......

ஓஷோ

Post a Comment

0 Comments