♥கீரைகளில் தண்டுக் கீரைக்குத் தனி சிறப்பு உண்டு. இது ருசியிலும் சரி, அரிய மருத்துவக் குணங்களிலும் சரி தண்டுக்கீரைக்கு ஈடு இணையில்லை .
♥திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கும். இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது தண்டுக் கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெறும்.
♥அவற்றினுள் தங்கியிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சீக்கிரம் அப்பெண்கள் கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.
♥இன்றைய காலத்தில் திருமணமான ஆண்கள் பலருக்கும் குழந்தை பிறக்காத நிலை ஏற்பட காரணம் அவர்களின் உயிரணுக்கள் வலிமையின்றி இருப்பதே ஆகும்
தண்டுக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு உடலில் ஓடும் நரம்புகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்தி ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.
♥காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது.
♥இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தண்டுக் கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளகச் செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
♥உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. தண்டு கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன.
♥எனவே தண்டுக் கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.

0 Comments
YOUR COMMENT THANKYOU