♥உங்கள் மனைவியின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதன்படி விட்டுக் கொடுத்து நடந்துங்கோங்க. அவளுடைய விருப்பங்களை அலட்சியப்படுத்தாதீங்க. உங்களுக்கு பிடிக்காததா இருந்தாலும், அவளுக்கு பிடித்ததை நீங்க ரசிக்கப் பழகிக்கோங்க.
♥உங்க மனைவி உங்கள விட அறிவிலோ, கல்வியிலோ, பொருளாதாரத்திலோ குறைவாக இருந்தால், அவளை குறைகூறாதீங்க; மற்றவருடன் ஒப்பிட்டும் பேசாதீங்க.
♥ உங்க மனைவிக்கு தேவையான சிறுசிறு உதவிகளை செய்ய மறக்காதீங்க.
♥மத்தவங்க முன்னாடி உங்க மனைவாயை ஒரு போதும் விட்டுக் கொடுத்துப் பேசாதீங்க.
♥கடுமையான வார்த்தையை பேசி காயப்படுத்தாதீங்க; அதுவும் மத்தவங்க முன்னாடி கூடவே கூடாது; கூலான, அன்பான வார்த்தைகளை மட்டுமே பேசுங்க.
♥சந்தோஷமா இருக்கும் போது மட்டுமில்லை, சங்கடமான சமயங்களிலும் பேசணும்.
♥நிறைய பேசுங்க, பேசவிடுங்க, பேசுறதை கேளுங்க… நீங்க மட்டும் பேசிபேசிப் போரடிக்காம, உங்க மனைவி பேசுவதையும் காதுகொடுத்து கேளுங்க.
♥மனைவியுடன் சண்டை போட்டுட்டு மனக் குமுறலோடு படுக்கைக்குப் போகாதீங்க. படுக்கப் போகும் முன் சண்டையை சுமூகமாக தீர்த்துக்கோங்க.
♥முடிந்த வரை இருவரும் சேர்ந்தே சாப்பிடுங்க. அட்லீஸ்ட் தினமும் டின்னர் மட்டுமாவது சேர்ந்து சாப்பிடுங்க.
♥உங்க அன்பை, காதலை வெளிக்காட்ட அடிக்கடி பரிசுகள் கொடுங்க… விசேஷ நாட்கள்ல மட்டுமல்ல; மற்ற நாட்களிலும் கொடுக்கலாமே!
♥வீட்டில் பர்ஸ்ட் பிரிபரன்ஸ் உங்க மனைவிக்கு தான் இருக்கணும்; அதுக்கு அப்புறமா தான் குழந்தைங்க கூட.

0 Comments
YOUR COMMENT THANKYOU