உடலுறவில் அல்லது கனவில் அல்லது 'ஏதோ ஒரு நிலையில்' (தியானத்தில் கூட) ரொம்ப ஒன்றி போய் தன் உடலையே மறந்து... (மெய் மறந்து) மூளை வெறுமையாகி உடல் முழுக்க ஒரு இன்ப ஆறு மின்சாரம் போல பாய்ந்து வருவது தான் ஆர்கஸம் அல்லது பரவச நிலை...
prolactin'ங்கிற ஹார்மோன் குபீர்ன்னு சுரந்து மூளையில் உள்ள Central nervous system பகுதியில் குறிப்பா Cerebral Cortex பகுதியில ஏற்படுத்தும் வெற்றிடம் தான் இந்த பரவச நிலைக்கு காரணம்ன்னு அறிவியல் சொல்லுது...
இந்த நிலையை கொஞ்சூண்டு கரென்ட்டை மூளையில் குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவது மூலமா செயற்கையா செய்ய முடியும்.. சரி கொஞ்சூண்டு கரன்ட்டை அனுப்பாமல் கொஞ்சம் அதிகமான கரன்ட்டை அனுப்பினால் என்ன ஆகும்?? பரவச நிலை, வலிப்பு வருவது போல பல அடுக்குகளில் வரும்... அதை செஞ்சு பார்த்தப்போ ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டவர்கள் சொன்னது, 'நான் கடவுளை பார்த்தேன்'.
ஆண் பெண் எல்லோருக்கும் அது தான்...
இண்டியா டுடே பத்திரிக்கை சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய சர்வேயின் போது இந்திய ஆண்களில் 90% பேருக்கு மேற்பட்டவர்கள் பெண்களுக்கான ஆர்கசம் என்றால் தங்களுக்கு என்னவென்று தெரியாது என்றே பதில் தந்திருக்கிறார்கள்.
எனவே உங்கள் கேள்வி வியப்புக்கு உரியது அல்ல. மிக இயல்பானது.
கலவியின் போது கலவி இன்பத்தின் உச்சக் கட்டத்தை விந்து வெளியேறும் தருணத்தில் ஆண் உணர்கிறான். அது போன்ற உச்சக்கட்ட இன்பம் பெண்ணுக்கும் உண்டு. பெண்ணின் கலவி உச்சக்கட்ட இன்ப உணர்வே ஆர்கசம் எனப்படுகிறது.
அது ஆணுக்கான உச்சக் கட்டத்தை விட பெண்ணுக்கான உச்சக் கட்டம் வித்தியாசமானது.
ஒரு முறை கலவி நிகழ்த்தும் போது ஆணுக்கான உச்சக்கட்டம் ஒரு முறை மட்டுமே நிகழும். ஆனால் பெண்ணுக்கான உச்சக் கட்டம் பல முறை நிகழும். இது இயற்கை பெண்ணுக்குக் கொடுத்திருக்கும் கொடை.
ஆனால் பெண்ணுக்கு உச்சக்கட்டம் உண்டு என்பதையே ஆண்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
தனக்கான காமத் தேவையில் மட்டும் குவியம் வைத்து கலவியில் செயல்படுகிறார்கள். பெண் உளவியல், உடலியல்ரீதியாக உச்சக்கட்டத்துக்கு தயார் ஆவதற்கு முன்பாகவே அவசர அவசரமாய் விந்துவினை வெளியேற்றி கலவியை முடித்துக் கொள்கின்றனர்.
காமம் குறித்த வெளிப்படையான உரையாடல் தடுக்கப்பட்டிருப்பதால் பெண் தன் ஆர்கசத் தேவையை ஆணிடம் ஒருபோதும் சொல்ல முடியாமல் போய்விடுகிறது.
இங்கு செயற்கையான காம வறட்சியை ஏற்படுத்தி, காமம் தொடர்பான குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவதே வன்மச் சமூகத்தின் வழக்கமாய் இருந்து வருகிறது.
காமம் - கலவி தொடர்பாக அவனுக்கு அடிப்படை ஆலோசனையோ - பயிற்சியோ தரும் செக்ஸ் ஃப்ரண்ட்லி சமூகமாக இந்தியச் சமூகம் இல்லை.
எனவே ஆர்கசம் என்பதும் இன்னும் அறியாச் சங்கதியாகவே தொடர்ந்து வருகிறது.

0 Comments
YOUR COMMENT THANKYOU