Subscribe Us

header ads

ஆண்களுக்கு ஒரு கோரிக்கை.

ஆண்களுக்கு ஒரு கோரிக்கை. காமம்தான் உங்களின் எதிர்பார்ப்பு என்றால், அதைத் தோழமையோடு சொல்லிவிடுங்கள். 'என்னால் கமிட்மென்ட்கள் கொடுக்க முடியாது' என்று அவளிடம் தெளிவாக வரையறுத்துவிடுங்கள். காதலையும், காமத்தையும் குழப்பி ஒரு பெண்ணச் சிதைப்பது, அதனால் உங்களுக்கு ஏற்படும் குற்ற உணர்வில் தவிப்பது போன்றவை தவிர்க்கப்படும்.

ஆணும் பெண்ணும் இணைவதே இயற்கை, பிரிவது அல்ல. ஆண்கள் துரோகம் செய்வதில்லை, பெண்கள் ஏமாற்றப்படுவதில்லை. ஆனால் அப்படித்தான் சமூகம் சொல்லிக்கொடுக்கிறது. தெளிவாகப் பேசுங்கள். உங்கள் அன்பை, ஆசையை நிர்ணயுங்கள். ஆண்கள் உலகம், அவர்களின் மனது பற்றி பெண் குழந்தைகளுக்கும், பெண்களின் மனது, அவர்களின் பிரச்னை பற்றி ஆண் குழந்தைகளுக்கும் சொல்லிகொடுத்து, நடுவில் இருக்கும் இரும்புச் சுவற்றை தகர்ப்பதுதான் முன்னேறிக்கொண்டு இருக்கும் சமூகத்துக்கு அவசியத் தேவை.

Post a Comment

0 Comments