ஹ்ம்ம்....உளவியல் எழுதுவதுக்கு பதிலா வேற டிபார்ட்மென்ட் இனிமேல் எழுதலாமோ ?
என்னென்னமோ கேள்விகள் பலவிதம் பலவண்ணம் பல தினுசு.
இந்த கேள்வியை அப்படியே - நீங்கள் கணவனா இருந்தால் மனைவி கிட்டேயும் மனைவியாக இருந்தால் கணவன் கிட்டேயும் மறக்காமல் கேட்டு கொள்ளவும்
முதலதுவி வேண்டும் அளவுக்கு அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை - முதல் இரவு தானே!
சினிமா இல்லை வாழ்க்கை - இங்கே யாரும் அப்படியே நாணி கோணி குறுகி பாட்டு பாட மாட்டாங்க..
நன்றாக படித்த பல நல்ல வேலைகளில் பெண்ணும் உள்ளனர்.
அப்படியே காலில் விழுந்து கும்பிட்டு...ஹ்ம்ம் அதுவும் நடக்காது
முதல் இரவில் முக்கியமாக பேச வேண்டும் பேசி சிலது புரிந்து கொள்ள வேண்டும்
திருமண சடங்குகள் பொறுத்து இருவருக்குமே tiredness இருக்கும்.
கடைசி இரவு என்றால் தான் வாழ்க்கையில் பயம் பதற்றம் வேண்டும்
இது ஒரு பரிட்சை ஹால் இல்லை....யாரும் மார்க் எல்லாம் போடமாட்டாங்க ...கூட இருக்கறவங்க boss இல்லை
இன்னும் கர்மா, ஜோதிடம், ஆன்மீகம் படி - வாழ்க்கையில் திருமணம் என்று எல்லோருக்கும் நடப்பது இல்லை....நடந்தால் அந்த ஜீவனுக்கும் நமக்கும் மிக பெரிய கர்ம பந்தம்..உள்ளது அதை தீர்க்காமல் இருக்க வாய்ப்பே இல்லை...சிலர் வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களும் இதே லாஜிக் இதே பந்தம் இருந்தால் மட்டும் தான்- ஆகையால் எதற்கும் ரொம்ப யோசிக்க வேர்க்க வருத்தப்பட பயப்பட ஒன்னும் இல்லை
ஹனிமூன் என்னும் தேன் நிலவு நேரங்கள் மிக அழகாக மறக்க முடியாததாக பலர் வாழ்வில் அமையும்
நீங்கள் நீண்ட நாள் ஒரு வாரம் மேல் கூட யோசித்து இருவர் அலுவல் அல்லது பிசினஸ் வேலைகளை பார்த்து போகலாம் ....ஒரு வாரம் 10 நாள் என்பது புது மண தம்பதி வாழ்வில் மிக அருமையான நாட்களாக இருக்கும்
நாட்கள் புக் செய்வது கிளம்புவதுக்கு முன்னர் பெண்டாட்டியிடம் நன்றாக தேதிகளை கேட்டு கொள்வது மிக முக்கியம்
மேலும் என்ன செய்வது? ஏது செய்வது? என்று பெற்றோர், நட்பு, ஆன்லைன் கோரா வீடியோ ஆடியோ எல்லாவற்றையும் விட...அதான் வாழ்நாள் முழுவதும் கூட வரேன் என்று ஓர் ஜீவன் வர சம்மதிச்சாங்க இல்லை? அவங்களை மட்டும் கேட்க வேண்டும் !
சின்ன வயதில் ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது - அக்காவின் தோழி சொன்னாங்க..ஹனி மூன் என்றால் என்ன என்று கேட்டதுக்கு அவங்க அண்ணா....மூன் நிலவை பார்த்து தேன் எடுத்து ஸ்பூன் ஸ்பூன் ஆ சாப்பிடுவது....என்று....;)
சீரியஸா கொஞ்சம் யோசித்தால்...
திருமணம் ஓர் நிகழ்வு...அதற்காக எல்லாத்தையும் சேர்த்து குழப்பி கொள்ள வேண்டாம்..
வாழ்க்கை போகிற போக்கில் எல்லாமே கற்று கொடுக்கும்
இந்த முதல் ஆறு மாதத்தில் தான் உங்கள் வாழ்க்கையே அடக்கம் என்று ஒன்றும் இல்லை...
சினிமாக்களில் விடீயோக்களில் காணப்படுவது மாதிரி துணை இருக்கப்போவது இல்லை
சினிமாக்களில் இருவரும் ரொம்ப அழகா இருப்பாங்க இல்ல ரொம்ப வின்(win) பண்றவங்க ஆள் பலம் ஊர் பலம்....திருமணம் ரொம்ப பெரிய விஷயம் அப்படி...
நிஜ வாழ்க்கையில் திருமண வெற்றிக்கும் அழகு அறிவு ஆள் பலம் பண பலம் பதவி எதுக்கும் சம்மந்தம் இல்லை.
பல இடங்களில் ஒருவர் அழகு மற்றவர் ரொம்ப சுமார் ஒருவர் 5 டிகிரி படித்து இருப்பாங்க இன்னொருத்தங்க படிக்காம (குறைந்த படிப்பு) ஒருத்தங்க ரொம்ப வசதி இன்னொருத்தங்க சுமார் இப்படி தான் ஜோடி சேருவார்கள்.
நாம மட்டும் இவ்வளவு செய்து கொண்டே இருக்கிறோமே...நமக்கு திரும்ப செய்வாங்களா என்ற எண்ணம் மட்டும் வேண்டாம் ....இயன்றவரை கொடுக்கவும்....இது மண வாழ்க்கையில் முக்கியம்...திரும்ப கிடைக்கிறதோ இல்லையோ
எல்லாத்தையும் கொடுக்கவும்....அது பண்பு, குணம், நற் பெயர், சரீர உடல் உதவி, பண உதவி (இயன்றால்). காதல், பாசம், நேசம், உணர்வு, உடம்பு, மனசு....இது எல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை அந்த இரவில் புரிந்து கொள்ள வேண்டும்....அன்றிலிருந்து மனம் எப்போதும் இன்னொருத்தருக்கு சேர்த்து யோசிக்க துவங்குவதால்....வாழ்க்கையில் எனக்கு மட்டும் என்ற selfishness குறைய ஆரம்பிக்கும் !
அது மாதிரி முதல் இரவு என்றால் வேண்டுமானால் ஜீவன் நம்மை முழுமையாக்க கிடைத்த முதல் நேரம் என்பதை நினைத்து...ஒரு நிமிடம் நன்றி தெரிவித்து இறைவனுக்கும் அந்த துணைக்கு ...பிறகு துவங்கும் காலம் என்று யோசிக்கலாம்.
நன்றியில் துவங்கினாலே எல்லா இரவும் பகலும் நன்றாக இருக்கும்
நன்றி

0 Comments
YOUR COMMENT THANKYOU