Subscribe Us

header ads

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா?

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா?
உடலுறவு என்று வரும் போதும் சரி குழந்தை பிறப்பு என்று வரும் போதும் சரி பெண்கள் தான் வலியை உணர்கின்றனர். அதிலும் பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டிருக்கும். சத்துக்கள் எல்லாம் குறைந்து உடம்பும் பலவீனமாக இருக்கும் காலக்கட்டம் அது. அதனால் தான் பெரியவர்களும் அந்தக் காலத்தில் பிள்ளை பெற்ற தாயை பச்ச உடம்புக்காரி என்று கூறுவார்கள்.
When Is The Right Time To Have Intercourse After Childbirth? 
ஏனெனில் பெண்கள் அந்தக் காலகட்டத்தில் தங்கள் உடல் நலனை பேண வேண்டியது அவசியம். சத்தான உணவுகள் மட்டுமல்ல உடலுறவில் கூட அவர்கள் பாதுகாப்புடன் செயல்படுவது அவசியம். ஏனெனில் பிரசவத்திற்கு பெண்களின் யோனி பகுதியில் வலி, இரத்த போக்கு, காயங்கள், புண்கள் என்று இருக்கும். இந்த மாதிரியான உடல் நிலை மாற்றங்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதே நேரத்தில் குழந்தை வளர்ப்பு, தாய்ப்பாலூட்டுதல் இப்படி மன ரீதியாகவும் அவர்கள் அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.
?
எனவே துணையுடன் மறுபடியும் பாலுறவில் ஈடுபடுவது என்பது கடினமான விஷயம். அதற்கு அவர்கள் சரியான காலத்தை தீர்மானிப்பது முக்கியம். அவர்களின் உடல் நிலையையும் மனநிலையையும் கருத்தில் கொண்ட பிறகே மறுபடியும் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட வேண்டும். சரி பிரசவத்திற்கு பிறகு எவ்வளவு காலம் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம்.
பிரசவத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடும் காலகட்டம் 
பிரசவத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடும் காலகட்டம்
பிரசவத்திற்கு பிறகு உங்கள் பாலியல் வாழ்க்கையை சரியான நேரத்தில் தொடங்க காத்திருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள் பிரசவத்திற்கு பிறகு நான்கு முதல் 6 வாரங்கள் வரை உடலுறவு வேண்டாம் என்பதை பரிந்துரைக்கிறார்கள். இதற்கு உங்களுக்கு சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என்பது முக்கியமல்ல. காரணம் பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு யோனி பகுதி இரத்த போக்கு அதிகமாக இருக்கும், ஆசனவாய் மற்றும் யோனி பகுதியில் தையல்கள் போட்டு இருக்க வாய்ப்புள்ளது. எபிசியோடமி போன்ற பிரச்சினைகளால் அவர்கள் அவதிப்படுகிறார்கள். இந்த காயங்கள், இரத்த போக்கு எல்லாம் நின்று குணமடைந்து வர அவர்களுக்கு ஒரு மாத காலம் நீடிக்கும். மேலும் பிரசவத்திற்குப் பிறகு சில வாரங்களுக்குள் உடலுறவு கொள்வது கருப்பை தொற்று அல்லது பிரசவத்திற்குப் பிறகான இரத்தப்போக்குக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது .எனவே பெண்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ஆய்வுத் தகவல்கள் 
ஆய்வுத் தகவல்கள்
ஒரு ஆய்வின்படி, பிரசவத்திற்குப் பிறகு முதல் மூன்று மாதங்களில் சுமார் 83% பெண்கள் பாலியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்கிறது ஆய்வு. யோனி வறட்சி, வலி, இரத்தப்போக்கு, ஆண்மை இழப்பு, வுல்வோவஜினல் அட்ராபி (யோனி நெகிழ்ச்சி இழப்பு), புண் மற்றும் பலர் கர்ப்பத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைவதாலும், தாய்ப்பால் கொடுப்பதாலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். மேலும் பிரசவத்திற்கு பிறகு உடனே உடலுறவு கொள்வது மீண்டும் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருப்பதால் பிறப்புக் கட்டுப்பாட்டை தொடங்க நேரிடுகிறது.
சிசேரியன் செய்த பிறகு செக்ஸ் 
சிசேரியன் செய்த பிறகு செக்ஸ்
அதிலும் சிசேரியன் செய்த பெண்களுக்கு பாலியல் வாழ்க்கைக்கு திரும்புவது என்பது மிகவும் போராட்டத்திற்குரிய விஷயமாக உள்ளது. சுகப்பிரசவம் என்றால் 4-6 வாரங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதுவே அறுவை சிகிச்சை செய்த பெண் என்றால் அறுவை சிகிச்சை செய்த வலி, வலி மிகுந்த ஊசிகள் என்று மீளவே நீண்ட வருடங்கள் ஆகின்றன. பெரும்பாலும் யோனி இயல்பு நிலைக்கு வந்து, பிரசவத்திற்குப் பிறகு ஆறு வாரங்களுக்குள் கருப்பை வாய் மூடப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . எனவே, உங்கள் பாலியல் வாழ்க்கையை புதுப்பிக்க இதை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. உங்கள் ஆரோக்கியத்திற்கும் இதுவே சிறந்தது.
பிரசவத்திற்கு பிறகான மாற்றங்களும்... பாலியல் வாழ்க்கையும்...
பிரசவத்திற்கு பிறகான மாற்றங்களும்... பாலியல் வாழ்க்கையும்...
ஒரு குழந்தையை பெற்ற பிறகு மன நிலை மற்றும் உடல் நிலை மட்டுமல்லாது பல காரணங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கின்றன. எனவே உங்கள் செக்ஸ் வாழ்க்கையை எப்படி பாதுகாக்கலாம் என்பதற்கான சில வழிகள் இதோ...
* யோனி கிழிசலால் உடலுறவின் போது அசெளகரியம் ஏற்படுதல்
* யோனி தளர்வடைந்து போதல்
* இடுப்பு எலும்புகள் பலவீனம் அடைவதால் உடலுறவின் போது சிறுநீர் கழிக்க நேரிடுதல்
* பிரசவத்தின் போது யோனி பகுதியில் நரம்புகள் சிதைவதால் யோனி பகுதியில் உணர்வில்லாத தன்மை
* தாய்ப்பால் கொடுப்பதால் உடலுறவில் நாட்டம் இழப்பு
* கரடுமுரடான கருப்பை வாய் பகுதியால் இரத்த போக்கு ஏற்படுதல்
* உடலுறவில் ஆர்வமின்மை.
* உடலுறவின் போது ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் சுரப்பதால் தாய்ப்பால் கசிவு ஏற்படுதல்.
பிரசவத்திற்கு பிறகு ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபடுவதற்கான சில டிப்ஸ்:
பிரசவத்திற்கு பிறகு ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபடுவதற்கான சில டிப்ஸ்:
மெதுவாக ஆரம்பியுங்கள்
எடுத்த எடுப்பிலேயே உடலுறவில் ஈடுபடாமல் புணர்ச்சியை தூண்டுதல், காதல் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுங்கள். இது உங்கள் உடம்பில் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோனை சுரக்க செய்து யோனி பகுதியை ஈரப்பதமுடன் வைத்திருக்க உதவும். மேலும் கருப்பையின் தசைகளும் சுருங்க உதவி செய்யும். இதனால் உடலுறவின் போது வலி இருக்காது.
உடலுக்கு கவனிப்பு தேவை 
உடலுக்கு கவனிப்பு தேவை
பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் குழந்தையின் நலன், தங்கள் நலன் என்று இரண்டையும் கவனித்து கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே பிரசவத்திற்கு பிறகு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். மசாஜ், ஸ்பா போன்றவற்றை செய்து கொள்ளலாம். இது உங்களுக்கு மறுபடியும் பாலியல் வாழ்க்கையை தொடங்க உதவியாக இருக்கும்.
கெகல் உடற்பயிற்சி 
கெகல் உடற்பயிற்சி
பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அனைத்து இடுப்பு பிரச்சனைகளையும் சரிசெய்ய இந்த உடற்பயிற்சி உதவி செய்யும். இந்த உடற்பயிற்சி உங்கள் இடுப்பு தசைகளை வலிமைபடுத்த உதவுகிறது. யோனியை இறுக்குகிறது. இடுப்பு பகுதியில் உள்ள உணர்வை மேம்படுத்தி கொடுக்கிறது.
உடலுறவின் போது எண்ணெய்களை பயன்படுத்துங்கள் 
உடலுறவின் போது எண்ணெய்களை பயன்படுத்துங்கள்
ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதால் பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு யோனி வறட்சியாக இருக்கும். இதனால் உடலுறவின் போது வலி ஏற்படுகிறது. எனவே உடலுறவின் போது எண்ணெய்களை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு உடலுறவின் போது வலி ஏற்படாமல் இருக்க உதவும்.
நேரம் ஒதுக்குங்கள் 
நேரம் ஒதுக்குங்கள்
பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம் மற்றும் சோர்வு என்பது பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகள். எனவே உங்கள் பாலியல் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவது குறித்து உங்கள் துணையுடன் பேசி முடிவெடுங்கள். பழைய நிலைக்கு திரும்பும் வரை அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் இது குறித்து பேச நேரம் ஒதுக்குங்கள். சரியான நேரம் என்றால் துணையுடன் நெருக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள். மேற்கண்ட பாதுகாப்பான டிப்ஸ்களும் உங்களுக்கு உதவியாக இருக்கும்

Post a Comment

0 Comments