ஒவ்வொரு ஆணும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதன் மூலம் ஒரு பெண் துன்பப்படுத்தப்படுவதற்குக் காரணமாக அமைகின்றோம்.
ஆபாசம் நம்மை அடிமையாக்குகிறது; இல்லை அடிமைப்படுத்துகிறது; அடிமைப்படுத்துவதென்பதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஆபாசப்படம் ஒரு இளைஞனுக்கோ இல்லை அல்லது பொதுவாக ஆண்களுக்கோ என்ன கற்றுத்தருகிறதென்று பார்த்தால் “நீ ஒரு ஆண்மகன்; காமத்தில் உன்னுடைய ஆண்குறியின் மதிப்பு அளவில்லாதது; ஏனென்றால் அது நீளமானது; நீ யாரிடம் உறவு கொள்கிறாய் என்பது பெரிதல்ல; மேலும் நீ புணரக்கூடிய பெண் அழகானவள், நிறைய படித்தவள், சூழ்நிலையை அழகாகக் கையாளத் தெரிந்தவள் என்பதெல்லாம் மதிப்பிற்குரியவையே அல்ல. மாறாக நீளமான உன்னுடைய ஆண்குறிக்குத் தான் அத்தனை புகழும் உரித்தாகும்”.
இதைத் தான் ஆபாசம் நமக்குக் கற்றுத் தருகிறது.
ஆபாசப்படத்தில் பெண்ணுக்கெதிரான உச்சகட்ட ஆணாதிக்கம் வெளிப்படுவதைக் காணலாம். ஆபாசப் படத்தில் நீங்கள் பார்ப்பது பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறையே. ஆபாசப் படம் எடுக்கப்படுவதைக் கவனித்தால் பெண் எப்படி ஒரு அருவறுக்கத்தக்க அடிமையாகப் பயன்படுத்தப்படுகிறாள் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
ஆபாசப்படங்களைப் பார்த்த பின்னர் அது என்னை வெகுவாக ஆட்கொண்டு விட்டது. அது என்னுடைய சிந்திக்கும் திறனையே அழித்து விட்டது. பெண்ணியம், காதல், காமம் குறித்த என்னுடைய கற்பனையே அழிந்து விட்டது. நான் ஒரு மனிதன் என்பதை ஏற்றுக்கொள்வதே அத்துணை சிரமமாக இருந்தது.பெண்ணையும் அவளின் உடலையும் அடைவதற்கு வெறி கொண்டு அலையும் சைக்கோவாக மாற்றி கொண்டு இருக்கிறது.

0 Comments
YOUR COMMENT THANKYOU