Subscribe Us

header ads

தூக்கமின்மைக்கும் செக்ஸ் குறைபாடுக்கும் தொடர்பு உள்ளதா? உள்ளது என்கிறது சில ஆய்வு!

தூக்கமின்மைக்கும் செக்ஸ் குறைபாடுக்கும் தொடர்பு உள்ளதா? உள்ளது என்கிறது  சில ஆய்வு!

அமைதியற்ற மனித மனதிற்கு இயற்க்கை (இறைவன்) அளித்த வரம் தான் தூக்கம். ஆனால் தூக்கமின்றி துக்கமாக கடந்து போகும் இரவுகள் தான் இன்று நம்மில் பலருக்கு தெரியும்.

இரவில் நீண்ட நேரம் தூக்கம் வராமலிருத்தல், தூங்கிய ஓரிரு மணி நேரத்தில் விழித்துக்கொள்ளுதல் போன்றவை ஒரு நோயாகவே வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் Insomnia (தூக்கமின்மை) என்று அழைக்கப்படுகிறது.

தூக்கமின்மைக்கான காரணங்கள் :

மனதளவில் உள்ள பிரச்சனைகளான பதட்டம் (Anxiety), மன அழுத்தம் (stress), மனச்சிதைவு (Depression), கோபம், வெறுப்பு, தோல்வி, பயம் போன்றவை ஆகும்.

மேற்க்குரிய காரணங்களால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆதலால் தாம்பத்திய வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் ஒரு விரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இதைத் தவிர சத்து குறைபாடுகள் (nutritional deficiencies), தொடர் பழக்கங்களான தேனீர், காபி அருந்துதல், குளிர் பானங்கள் பருகுதல், நேரம் தவறி தூங்க செல்லுதல், மது அருந்துதல், புகைப்பிடித்தல், குடும்ப பிரச்சனைகள் அவசர மற்றும் துரித வாழ்க்கை முறைகள் இது யாவும் தூக்கமின்மைக்கு வழி வகுத்து செக்ஸ் குறைபாடுகள் வந்து முடிவடைகிறது.

கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான அகத்தி, தண்டு கீரை, சோயா பீன்ஸ் போன்றவகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, புழுங்கல் அரிசி, வெற்றிலை, மாம்பழம், பிளம்ஸ் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தானியங்கள், கீரைகள், மற்றும் பழங்களில் உள்ள வைட்டமின் பி சத்துக்கள் உடல் மற்றும் மன இறுக்க நிலையை குறைக்கிறது.

தேன் கூட்டில் கிடைக்கும் ராயல் ஜெல்லி panthothenic acid அதிகம் உள்ளது (vit. B5) இது மன அழுத்தத்தினை குறைக்கிறது (anti stress vitamin).

பாசிப்பயறு, கேழ்வரகு தூக்கத்திற்க்கு சிறந்த வைட்டமின்.

மாலை நேரங்களில் வாழைப் பழம், அத்தி, பேரீச்சம் பழம் பால் முழுதானியம், திராட்சை பழம் எடுத்துக்கொண்டால் தூக்கம் நன்றாக வரும். மேலும் இவையெல்லாம் தாம்பத்தியத்திற்க்கு ஏற்ற பொருளாகும்.

Post a Comment

0 Comments