Subscribe Us

header ads

விந்து முந்துதல் என்பது சில நொடிகள் முதல் சில நிமிடங்களுக்குள் தம்பதிகள் மன நிறைவு அடைவதற்குள் விந்து வெளியேறுவதைக் குறிக்கும்

விந்து முந்துதல் என்பது சில நொடிகள் முதல் சில நிமிடங்களுக்குள் தம்பதிகள் மன நிறைவு அடைவதற்குள் விந்து வெளியேறுவதைக் குறிக்கும்.
நமது உடலில் சிம்பதெடிக் நரம்பு மண்டலம், பாரா சிம்பதெடிக் நரம்பு மண்டலம் என இரண்டு உண்டு, சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது ஆபத்துக் காலத்தில் ஓடுவதற்கும், விரைந்து செயல்படவும் உதவும். இந்த நரம்பு மண்டலம்தான் விந்து வெளியேறுவதற்குக் காரணமாகும்.
நீங்கள் பரபரப்பான மனநிலையிலோ, உடலுறவில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்துடனோ ஈடுபட்டால் விந்து விரவில் வெளியேறிவிடும். அதுபோலவே, உடற்பயிற்சிக்குப் பின் உறவில் ஈடுபட்டாலும் விரவில் விந்து வெளியேறிவிடும். எனவே அமைதியான மனநிலையில், உடற்பயிற்சி செய்தவுடனே இல்லாமல் சிறிது நேரம் கழித்து உறவில் ஈடுபடுங்கள்.
மனைவியை ஆணுறுப்பைத் தூண்டச் செய்யுங்கள். விறைப்படைந்தவுடன் தூண்டுவதை நிறுத்தச் செய்யுங்கள். மீண்டும் தூண்டச் செய்யுங்கள். பின்பு விறைப்படைந்தவுடன் தூண்டுவதை நிறுத்தச் சொல்லுங்கள். மேலும், சில நல்ல மருந்துகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி முழுமையாக விந்து முந்துவதைத் தவிர்த்துவிடலாம்.

Post a Comment

0 Comments