♥[#தாய்ப்பால்](♥[#தாய்ப்பால்] கொடுக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்♥
♥அன்பு நிறைந்த உணவு
தன் வயிற்றில் பிறந்த, தனது உயிரின் தனது உணர்வுகளின் உருவகமான தன் குழந்தைக்கு, தாய் தன்னிடம் சுரக்கும் அமுதமான தாய்ப்பாலை அளித்து உயிர் ஊட்டுவது, இயற்கையின் ஓர் அற்புதம்!
♥தாய் தன் குழந்தையின் வயிற்றுக்கு மட்டுமா உணவு ஊட்டுகிறாள்? உடலோடு அணைத்து, குழந்தையைக் கைகளால் ஆரத்தழுவி, கன்னத்தோடு கன்னம் இழைத்து, தலையை வருடி, குழந்தையின் கண்களில் தன்னையே கண்டு தனது பாச மொழியால் குழந்தையைக் கொஞ்சும்போது, குழந்தையின் உணர்வுகளுக்கும் திகட்டும் அளவுக்கு உணவு அளிக்கிறாள்.
குழந்தைக்குத் தேவையான மாவுச் சத்து, புரதம், கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் மற்ற நுண்ணூட்டச் சத்துகள் ஆகிய எல்லாவித உயிர்ச்சத்துகளும் தேவையான அளவில் குழந்தைக்குக் கிடைக்கிறது.
♥முதிர்ச்சி அடையாத சிறு குழந்தையின் செரிமானப் பாதை (Digestive system) எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையில் இந்தச் சத்துகள் தாய்ப்பாலில் இருக்கின்றன. குழந்தைக்குத் தேவையான தண்ணீர்கூட தாய்ப்பாலில் இருக்கிறது. ஆறு மாதம் வரை, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்குத் தண்ணீர்கூட தேவையில்லை. கோடைகாலத்திலும்தான்.
#தாய்ப்பால்
♥தாய்பால் குடிக்கும் குழந்தைக்கு நோய்த்தொற்றுகள் வருவதில்லை. வயிற்றுப்போக்கு, சீதபேதி, சளி நோய்கள், சிரங்கு, காதில் சீழ் போன்ற பல நோய்களுக்குத் தேவையான எதிர்ப்புச் சக்தி தாய்ப்பாலில் இருக்கிறது. பாட்டிலில் பால் தரும்போது பல நோய்க் கிருமிகள் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. அதனால்தான், தாய்ப்பால் குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்து என்று தாய்ப்பால் போற்றப்படுகிறது.
♥தாய்ப்பால், குழந்தைக்கு முதல் உணவுதாய்ப்பால், குழந்தைக்கு முதல் உணர்வுதாய்ப்பால், குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்துதாய்ப்பால், குழந்தைக்கு முதல் சத்து மருந்து
♥தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படுவதில்லை. குழந்தைக்கு தாடை எலும்புகள், பற்கள், நன்கு வளர தாய்ப்பால் உதவுகிறது.
♥தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை, வயது வந்த பிறகும் பயனடைகிறது. தற்போது மனித சமுதாயத்துக்குப் பெரும் சவாலாக விளங்கும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல் பருமன் போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு, தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைக்கு மிகவும் குறைவு.
♥சில மணி நேரங்கள் தாய்ப்பால் தராமல் இருந்தால், ‘கட்டுப்பால் அதைத் தரக்கூடாது! குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்’ என்ற ஒரு தவறான கருத்து தாய்மார்களிடையே நிலவுகிறது. இது அறிவியல்ரீதியாகத் தவறு. கட்டுப்பால் என்பது இல்லை. வேலைக்குப் போகும்வரை தாய்ப்பால் தர வேண்டும். வேலையிலிருந்து திரும்பி வந்த பிறகு மார்பகத்தைச் சுத்தம் செய்துகொண்டு, உடைகளை மாற்றிக்கொண்டு தாய்ப்பால் தரலாம். வேலைக்குக் கிளம்பும் முன் ஒரு சுத்தமான மூடியுடன் கூடிய பாத்திரத்தில் தாய்ப்பாலைக் கறந்து எடுத்துவைத்துவிடலாம். வெயில்படாத ஒரு இடத்தில் வைத்திருந்து 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். குளிர் சாதனப்பெட்டி இருந்தால் 24 மணிநேரம்கூட வைத்திருந்து கொடுக்கலாம். தாய்ப்பால் வங்கியின் அடிப்படையும் இதுதான்.
♥குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தரப்பட வேண்டும்!சிசேரியன் பிரசவம் என்றால், பிறந்த 4 மணி நேரத்துக்குள் குழந்தைக்குத் தாய்ப்பால் தர வேண்டும்.குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்.6 மாதத்துக்குப் பிறகு இணை உணவுகளுடன் தாய்ப்பாலும் தொடர்ந்து தர வேண்டும். 2 வருடம் தாய்ப்பால் தருவது குழந்தைக்கு மிகவும் நல்லது.தாய்ப்பால் அளிக்கும் தாய், தினமும் குளித்து சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம்.தாய்ப்பால் கொடுப்பதற்காக விசேஷமான உணவுகள் எதுவும் தேவையில்லை.தாய்க்கு தினமும் சுமார் 500 கலோரிகள் மற்றும் 15 கிராம் புரதம் கூடுதலாகத் தேவை, அவ்வளவுதான்.2 டம்பர் பால், ஒரு முட்டை, ஒரு கரண்டி பச்சைக் காய்கறிகள் போதும்.தாய்க்கும் சேய்க்கும் உடல் நலம் பாதித்தாலும் தாய்ப்பால் தர வேண்டும். எந்த நோய்க்கும் பயந்து தாய்ப்பாலை நிறுத்தத் தேவையில்லை.
♥தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைக்குப் புத்திக்கூர்மை அதிகமாக இருக்கும். இதுவும் ஆராய்ச்சி முடிவுதான். நல்ல அறிவுள்ள மாணவனாகத் திகழ தாய்ப்பால் மிகவும் அவசியம்.
♥தாய்ப்பால் தருவதால் பெண்களுக்கும் நன்மை உண்டு.மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குக் குறைவு.தாயின் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து உடல் எடை சீராகப் பராமரிக்கப்படுகிறது.குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், அந்தச் சமயத்தில் தாய் கருத்தரிப்பதில்லை.
♥இதை ஒரு தாற்காலிகக் கருத்தடை முறை என்றும் சொல்லலாம்.
♥தன் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வளர்ப்பேன் என்று, கர்ப்பம் அடைந்த நாளிலிருந்து ஒரு தாய் உறுதி எடுத்துக்கொண்டால், நிச்சயமாக அந்தத் தாயால் குழந்தையைத் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து நன்றாக வளர்க்க முடியும். தாய்ப்பால் குடிக்காத குழந்தை உரிமை மறுக்கப்பட்ட குழந்தை என்றும், ஏமாற்றப்பட்ட குழந்தை என்றும் சமூக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
♥முதல் சில வாரங்களில் எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பாலூட்ட வேண்டும்?
தேவைக்கு ஏற்ப அல்லது ஒரு நாளைக்கு எட்டு முறை அல்லது தேவைக்கு ஏற்ப 2-3 மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பாலூட்ட வேண்டும்.
♥தாய்ப்பால் எவ்வாறு ஊட்டப்படுகிறது?
பாலூட்டல் ஒரு உத்தி. காம்பில் தகுந்தவாறு குழந்தை வாய்வைத்துப் பால் குடிக்கும் வண்ணம் குழந்தையை சரியான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
♥ஒரு தாய் இரண்டு மார்பையும் பயன்படுத்தலாமா?
ஒவ்வொரு தடவை பாலூட்டும் போதும் இரு வகையான பால் சுரக்கிறது: தாகம் தீர்க்கும் பால் மற்றும் கொழுப்பு நிறைந்த பால். இரண்டுமே குழந்தைக்குத் தேவை. எனவே ஒரு முறை பாலூட்டும் போது குழந்தை ஒரு மார்பில் உள்ள பாலை அருந்தி விட்டால் அடுத்த முறை இரண்டாவது மார்பில் பாலூட்டவும். உங்கள் குழந்தைக்கு வசதியாகவும் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருக்கும் வரை நீங்கள் சரியாகவே செய்கிறீர்கள் என்று பொருள்.

0 Comments
YOUR COMMENT THANKYOU