உங்கள் உடல் நலம் இயற்க்கையில்
மாதவிடாய் அதிகபோக்கு.
வேம்பு எண்ணெய் அரை லிட்டர், விளக்கெண்ணெய் கால் லிட்டர், நல்லெண்ணெய் அரைக்கால் லிட்டர் இவைகள் மூன்றையும் கூட்டி பூண்டு பல் 5, பிரண்டை 4 விரல் அளவு, கருந்துளசி ஒரு பிடி, ஆல மொட்டு சிறிது, வெள்ளைத் தாமரையின் நடு(விதை பாகம்) மூன்று இவை அனைத்தையும் அரைத்து மேற்ப்படி எண்ணெய்யில் கலந்து மண் சட்டியிலுட்டு விறகு அடுப்பில் காய்ச்சி தைலப்பதம் வந்தவுடன் எடுத்து வைக்கவும். மேற்ப்படி தைலத்தை தினமும் அடி வயிற்றில் தடவி, தேய்க்க பெண்களின் மாதாந்திர விலக்கு சம்பந்தமான சகல தொந்தரவுகளுக்கும் நல்லது. அதிக ரத்தப் போக்கு, அந்த காலங்களில் உண்டாகும் வயிற்று வலி நீங்க 10 நாட்களுக்கு முன்பாக உபயோகித்து வர சுகமாகும்.
மாதவிடாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தால் காலையில் வெறும் வயிற்றில் (வேறு எதுவும் ச ப்பிடக்கூடாது) ஏலக்காயை நன்றாக பழுத்தப் வாழைப் பழத்துடன் சாப்பிடுங்கள். மற்றும் தவிடாய் தொடர்ந்து போவது நின்று விடும்.
2,3 செம்பருத்திப் பூக்களை பசு நெய்யில் வறுத்து தின்றால் இரத்தப் போக்கு நின்றுவிடும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU