உங்கள் உடல் நலம் இயற்க்கையில்:
பருவமடைதல்:
செம்பருத்திக்கு ருது உண்டாக்கக் கூடிய குணம் உண்டு. தகுந்த வயது வந்து பருவக்கழிவு எய்தாத பெண்களுக்குச் செம்பருத்தம் பூவை எந்த ரூபத்திலும் கொடுத்து வர அப்பெண் பருவம் அடைவாள்.
பருவப் பெண் உரிய வயதில் பூப்பெய்தவில்லையா?
செம்பருத்திப் பூவில் கல்கண்டுத் தூளைச் சேர்த்து தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். இதில் லவங்கம், ஏலக்காய் சேர்த்து தினமும் இரு வேளை குடித்து வர சீக்கிரமே மஞ்சள் நீராட்டு விழா நடக்கும்.
இரத்தப் போக்கு நிற்க்க, 2-3 செம்பருத்திப் பூவை பசு நெய்யில் வறுத்து உண்ண வேண்டும். புஷ்பவதியாகாத பெண்களுக்கு இதைக் கொடுத்து வந்தால் சீக்கிரம் புஷ்பவதி அடைவாள்.
கடுகு, கருஞ்சீரகம், பனை வெல்லம் இம்மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை பருவ வயதில் , வயதுக்கு வராமல் இருக்கும் பெண்ணுக்கு அதி காலையில் கொடுத்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
கல்யாண முருங்கை என்ற முள் முருங்கை இலையை வேக வைத்துக் கடைந்து தேங்காய் எண்ணெயில் தாளித்து சோற்றுடன் உண்ண பெண்களுக்கு பால் சுரக்கும். பருவம் அடையாத பெண்கள் வேண்டும் விரைவில் பூப்பு எய்துவர்.

0 Comments
YOUR COMMENT THANKYOU