Subscribe Us

header ads

பாலியல் கல்வி தேவையா?? தேவையில்லையா??

பாலியல் கல்வி தேவையா?? தேவையில்லையா??

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிராக இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகளவு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் பாலியல் குறித்த சரியான புரிதல் மக்களிடம் இல்லை என்பதுதான் என்றும், ஆண் குழந்தைகளின் வளர்ப்புமுறை, அவன் வளர்ந்து வரும் சூழலில் பெண்களை பற்றிதான எண்ணங்கள் நல்லதாக இருக்க போதிக்கபட வேண்டும் என்றும், பள்ளிப்பருவத்திலேயே பாலியல் குறித்த பாடங்கள் இருந்தால் இந்த குறை நீக்கப்படலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

பாலியல் கல்வி என்பது பால் தன்மை, இனப்பெருக்கம், பாலுறவு, கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகும்.

பாலியல் கல்வி தேவையா என்பது பற்றிய சர்ச்சைகள் பரவலாக காணப்படுகிறதெனினும் அது ஓரளவுக்கேனும் பாடசாலையில் உயிரியல் பாடத்திட்டத்தில் காணப்படுகிறது. அந்த பகுதிகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்க தயங்குகிறார்கள்.. ஒரு கட்டத்தில் எய்ட்சின் தீவிர பரவல் பாலியல் கல்வியின் தேவையை அதிகரித்துள்ளது. ஆயினும் எந்த வயதில் பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதிலும், எத்தகைய விடயங்கள் கற்பிக்கப்படலாம் என்பதிலும் சர்ச்சைகள் தொடர்கின்றன.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று பாலியல் கல்வி பள்ளியில் தேவையா??
என்பது குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்துள்ளது. இதன் முடிவுகள் பின்வருமாறு:

பள்ளியில் பாலியல் கல்வியை அனுமதிக்கலாமா??
என்ற கேள்விக்கு,
90% பேர் அனுமதிக்கலாம் என்றும்,
10% பேர் வேண்டாம் என்றும்,
பதிலளித்துள்ளனர்.

பாலியல் கல்வி என்பதை நமது சமூகம் சரியாக புரிந்துகொள்ளுமா??
என்ற கேள்விக்கு
5% பேர் ஆம் என்றும்,
41% பேர் கல்வித்துறைக்கு கூடுதல் தெளிவு தேவை என்றும்,
54% பேர் புரிந்துகொள்ளாது என்றும்,
பதிலளித்துள்ளனர்.

பாலியல் கல்வி நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்??
என்ற கேள்விக்கு
72% பேர் பாலியல் குற்றங்கள் குறையும் என்றும்,
6% பேர் பாலியல் குற்றங்கள் குறையாது என்றும்,
22% பேர் மாற்றம் எதுவும் இருக்காது என்றும்,
பதிலளித்துள்ளனர்.

மொத்தத்தில் காதலுக்கும், காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்க்கையை தொலைக்கின்ற பல மாணவர்களுக்கு பாலியல் கல்வி கண்டிப்பாக தேவை என்றும், பாலியல் கல்வி இல்லாததால் தான் "செக்ஸ்" என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை ஆகிவிட்டதாகவும் கருத்து வெளியாகியுள்ளது.

இப்போதும் பாலியல் என்பது இரகசியம், அது விவாதிக்கப்படவே கூடாத விஷயம் என்று நினைத்து பலர் ஒதுக்குகின்றனர். வெளிப்படையாகப் பேசவும் தயங்குகின்றனர். ஏனெனில் அது மாதிரியான மனோபாவத்தை நமது சமூகம் கலாச்சார அமைப்பு மனித மனங்களில் மீது திணித்துவிட்டது. பாலியல் தேவை என்பது தவறோ, குற்றமோ ஆகாது. அது இயல்பான ஒன்றுதான். பாலியல் தேவை மனித வாழ்விற்கு முக்கியத் தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன், இன்றியமையாததாகவும் உள்ளது.

இயற்கையாக இன்பம் அடைவதற்கும் தன் துணையுடன் இணக்கம் ஏற்படுத்திக்கொள்ளவும் தன் இனப்பெருக்கத்திற்கும் பாலுறவு ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் அடிப்படைத் தேவையாகிறது. பாலியல் பற்றிய உண்மைகளை மறைத்து வைப்பதால்தான் அதன் மீது நாட்டம் உண்டாகி, அது என்னவென்று அறிந்துகொள்ள மேலும் ஆர்வம் ஏற்படுவது இயற்கையே, மறைத்து வைக்கப்பட்ட எந்தவொரு இரகசியத்திற்கும் கவர்ச்சி இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

எனவே பாலியல் பற்றி அறிய, அனுபவிக்க, ஏதேனும் ஒரு இரகசியமான படங்களும், தவறான வழிகாட்டுதலை தருகின்றன. இது ஆண், பெண் இருபாலரையும் மோசமான பாதைக்கு இழுத்துச் சென்று வேதனை தரும் பின் விளைவுகளுக்கு உள்ளாக்கவும் காரணமாக அமைகிறது. இவற்றைத் தவிர்த்து மட்டரக உணர்ச்சிகளுக்கு முடிவுகட்டி பாதுகாப்பான பாலியல் உண்மைகளை தெரிந்துகொள்ள இளம் தலைமுறையினருக்கு வேண்டிய அளவு பாலியல் கல்வி வழங்குவது அவசியமாகிறது.

பாலியல் அறிவை ஊட்டுவதில் குழந்தை பருவத்தில் பெற்றோர்க்கும், இளம் வயதில் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மூன்றாவது மனிதர் மூலமாகவோ, மஞ்சள் பத்திரிக்கைகள் வழியாகவோ, மோசமான கதைகள், திரைப்படங்களின் மூலமாகவோ தவறான பாலியல் அறிவு பெறுவதை விட பெற்றோரும், ஆசிரியர்களும் பாலியல் உண்மைகளை அந்தந்த சிறு வயதிலேயே பக்குவமாக கற்றுக்கொடுத்தால் தான் அவர்கள் பருவம் அடையும்போது, பொறுப்புள்ளவராகவும், நல்ல சமூகத்தின் உறுப்பினர்களாகவும் விளங்க முடியும். பாலியல் தொடர்பான குற்றங்கள் குறையும். பாலியல் பிரச்சனைகளால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், தற்கொலைகள் குறையும்..
ARUPATHU ONBATHU TAMIL69COM #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69 #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69 #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69

Post a Comment

0 Comments