Subscribe Us

header ads

உங்கள் விந்தணுக்களுக்கு கருத்தரிக்கும் தகுதி உள்ளதா ?:

உங்கள் விந்தணுக்களுக்கு கருத்தரிக்கும் தகுதி உள்ளதா ?:
விந்தணுக்கள் வடிவம் :
விந்தணுக்கள் 50% க்கும் மேல் சாதாரண வடிவம் பெற்று இருக்க வேண்டும். விந்தணுக்களில் 50%க்கும் குறைவாக சாதாரண வடிவம் கொண்டிருந்தால் குழந்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாகவே இருக்கும்.
விந்தணுக்கள் தலை, வால், உடம்பு, இரட்டை தலை இல்லாமல் மற்றும் இரட்டை வால் இல்லாமல் இருக்கும் விந்தணுக்கள் மட்டுமே ஆரோக்கியமான விந்தணுக்கள், இவற்றை சாதாரண வடிவம் கொண்ட விந்தணுக்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

அசாதாரண விந்தணுக்கள் முதிர்ச்சி அடையாமல் இருப்பதால் இவற்றுக்கு முட்டையை உருவாக்கும் தகுதி மிக குறைவாகவே இருக்கும், தவறுதலாக உருவாக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விந்தணுக்கள் செயல்பாடுகள் :
விந்தணுக்கள் வெளியிடப்பட்டு ஒரு மணி நேரம் வரை நகர்ந்து கொண்டே இருக்கும்.

இப்படி நகர்ந்து கொண்டிருக்கும் விந்தணுக்களால் மட்டுமே முட்டையை உருவாக்கும் தன்மை கொண்டது. 50% க்கும் மேல் விந்தணுக்கள் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். விந்தணுக்கள் நகர்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள தானியங்கி கருவி உள்ளது.

உங்கள் விந்தணுக்கள் 0 - 4 வேகத்தில் நகரும். 0 என்றால் விந்தணுக்கள் நகரவில்லை என்று கூறப்படுகிறது. 3 அல்லது 4 அதீத வேகம் ( திறன் ) கொண்டது.

pH அளவு :
pH அளவானது 7.2 - 7.8 வரை இருக்கும் விந்தணுக்கள் மட்டுமே சிறந்தது. pH 8.0 விற்கு மேல் இருந்தால் உங்களுக்கு நோய்கள் இருப்பதாக அர்த்தம்.

pH 7.0 விற்கு கீழ் இருந்தால் உங்கள் விந்தணுக்கள் கலப்படம் அல்லது ஆண் குறியில் ஏதேனும் குறைகள் இருக்கலாம்.

அளவு :
உங்கள் விந்தணுக்கள் குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும், இதற்கு குறைவாக இருக்கும் விந்தணுக்களால் ஒரு குழந்தை உருவாக்குவதற்கான திறன் மிக குறைவு.
மிக அதிக அளவு விந்தணுக்கள் வெளியே வந்தால் அவை நீர்த்துப் போய் இருக்கும். அதிக அளவு என்றால் சிறந்த அணுக்களாக கருதப்படாது. நீர்த்துப் போன விந்தணுக்கள் ஒரு போதும் உங்களுக்கு நன்மை அல்ல.

கரையும் திறன் :
15 - 30 நிமிடங்களில் உங்கள் விந்தணுக்கள் கரைய வேண்டும். ஆரம்பத்தில் உங்கள் விந்து கட்டியாக இருக்கும், 30 நிமிடங்களுக்கு பிறகு அனைத்தும் கரைந்திருக்க வேண்டும். கரையவில்லை என்றால் விந்தணுக்கள் நகராது மற்றும் குழந்தை உருவாக்குவதற்கான திறன் இருக்காது.

விந்தணுக்கள் எண்ணிக்கைகள் :
சாதாரணமாக எண்ணிக்கைகள் 20 மில்லியன் முதல் 200 மில்லியன் வரை இருக்கலாம். இந்த எண்ணிக்கை குறைந்தால் விந்தணுக்கள் கர்ப்பம் தரிக்க செய்யாது.

நிறம் :
சாம்பல் நிறம் உள்ள விந்தணுக்கள் ஆரோக்கியமானது. மஞ்சள் நிறமாக இருந்தால் உங்களுக்கு மஞ்சள் காமாலை இருக்கலாம். சிவப்பு நிறத்தில் இருந்தால் இரத்தம் கலந்து இருக்கலாம்.

மேலும் இது போன்ற அரிய தகவல்களை தெரிந்துகொள்ள எங்களை பின்தொடருங்கள்.





Post a Comment

0 Comments