REMEDY FOR PERIOD TIME BREAST PAIN
மார்பகத்தில் வலி என்பது, பெரும்பாலான பெண்கள், பொதுவாக சொல்லக்கூடிய தொந்தரவு.
பொதுவாக, ‘மாதவிடாய் வருவதற்கு முன், இரண்டு மார்பகங்களிலும் வலி வரும். மாதவிடாய் வந்தபின் வலி குறைந்து விடும். இது, மிகவும் இயற்கையான விஷயம்.
நம் உடம்பில், மாதந்தோறும் மாதவிடாய் வருவதற்காக, சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். மாதவிடாய் ஏற்பட்டதில் இருந்து, அடுத்த, பதினான்கு நாட்களுக்கு 'ஈஸ்ட்ரோஜென்' என்கிற ஹார்மோன் அதிகமாக சுரக்கும்.
அதன் பிறகு தான், சினைப்பையில் இருந்து, கருமுட்டை முதிர்ச்சியடையத் துவங்கும்.
இந்த சமயத்தில் இருந்து, அடுத்த மாதவிடாய் வரும் நாள் வரையிலும் 'புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்' சுரப்பு அதிகமாக இருக்கும்.
இதனால், மாதவிடாய் வருவதற்கு இரண்டு வாரங்கள் முன்பிருந்தே, மார்பகங்கள் கனமாக இருக்கும். இது, நோய் கிடையாது. ஹார்மோன் சுரப்பினால் ஏற்படும் சமச்சீரற்ற தன்மை.
இந்த வலி அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. அது தனிப்பட்ட நபர்களின் உடல்வாகைப் பொறுத்து, சிலருக்கு அதிகமாக இருக்கும்; சிலருக்கு மிக குறைவாக இருக்கும். ஒரு சிலருக்கு வலியே இருக்காது.
இதற்கென்று தனியாக சிகிச்சைகள் எதுவும் இல்லை. வலியை கட்டுப்படுத்த மாத்திரைகளை பயன்படுத்தினால், பக்க விளைவுகள் ஏற்படும்.
தொடர்ந்து மார்பு பகுதியில் வலி இருந்து வந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

0 Comments
YOUR COMMENT THANKYOU