மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை நீக்க வீட்டுக் குறிப்புகள்
சில வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாதது. பொதுவாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கால் மற்றவர்கள் மீது எரிச்சல் , முகப்பரு, சோர்வான நிலை போன்றவையும் ஏற்படக்கூடியது சகஜம். அதேசமயம் தலைவலி, வாந்தி, கால்வலி, குறிப்பாக அடி வயிற்று வலி போன்றவை அவர்களை எந்தவித வேலையும் செய்ய முடியாத அளவிற்கு வாட்டும். சில வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இன்ஃபார்மட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (InformedHealth.org) நடத்திய ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் அந்த வலியைக் கட்டுப்படுத்தும் சில இயற்கை மருத்துவத்தை எடுத்துக் கொள்ளலாம். அவை என்னென்ன என்பதைக் காணலாம்.
இஞ்சி டீ : இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்துக் குடிப்பதால் அடி வயிற்று வலி குறையும். அதேபோல் உடல் வலியும் குறையும். புத்துணர்ச்சியாக இருக்கும். இது மாதவிடாய் தல்லிப்போதலையும் தடுக்கும்.
ஒத்தடம் : அடிவயிற்றில் ஹீட்டிங் பேட் அல்லது மண்ணை சூடு படுத்தி துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் அடிவயிற்றுவலி குறையும். தசைகள் இலகுவாகும். தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் காட்டன் துணியை முக்கி பிழிந்து அடி வயிற்றில் வைத்துக் கொண்டு படுத்தாலும் வலி குறையும்.
பட்டை டீ : அரை அல்லது கால் இஞ்சு பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் அடி வயிற்று வலிக் குறையும். அதன் ருசி அத்தனை நன்றாக இல்லை என்றாலும் குடித்தால் பலன் அதிகம்.
பப்பாளி : பப்பாளியை மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே உண்டு வந்தால் கர்பப்பை வலுபெற்று அதன் வேலையைச் சிறப்பாகச் செய்யும். இரத்தப்போக்கும் சீராகும். வயிற்றுவலியும் குறைவாகும்.
ஆளி விதை : ஆளி விதையில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. இது கர்பப்பை தடையில்லாமல் வேலை செய்ய உதவுகிறது. கருவுறுதல் பிரச்னை இருந்தாலும் சரி செய்கிறது. இதை தினமும் ஒரு மேசைக்கரண்டி உண்டு வந்தால் வயிறு இறுக்கிப்பிடித்தல், வலி போன்ற பிரச்னைகள் இருக்காது.
வெந்தையம் : வெந்தையத்தை வெறும் வயிற்றில் உண்பதால் வயிறு இறுக்கிப்பிடித்தல் குறையும். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊற வைத்து பேஸ்டாக்கி ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
சோம்பு : இந்தியா மசாலா வகைகளில் முக்கிய பொருள். இது உணவுக்கு மட்டுமல்ல. நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. இதை அரைத்து வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்

0 Comments
YOUR COMMENT THANKYOU