#செக்ஸ்_உடல்நலத்திற்கு #ஓர்_அருமருந்து❓❗
செக்ஸில் அடிக்கடி ஈடுபட்டால் உடம்பு சரியில்லாமல் போகும். நோய்கள் பீடிக்கும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.
இது உண்மையா?
மூளை,
இதயம்,
ஹார்மோன்கள்,
ரத்த ஓட்டம்
ஆகிய நான்கும்தான் செக்ஸ் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பவை. இந்த உறுப்புகள் செய்யும் ரசாயன மாற்றங்களால்தான் செக்ஸ் ஆர்வம், விறைப்புத்தன்மை ஆகியவை ஏற்படுகின்றன.
இந்த உறுப்புகளை சீராக வைத்திருக்க வேண்டும். இப்போது மருத்துவத்துறை அதிநவீன வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.
மருத்துவ ரீதியாகப் பார்க்கும்போது, உறவு கொள்ளும் போது உடல் ரீதியாக நிறைய பயன்களை அடைய முடியும் என்பதுதான் உண்மை.
செக்ஸ் என்பது இதயத்தை நன்கு துடிக்க வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிறந்த உடற்பயிற்சி.
💢 ஏரோபிக் உடற்பயிற்சிக்கு இணையானது
செக்ஸ் உறவு.
ஒவ்வொரு முறையும் செக்ஸில் ஈடுபடும்போது 200 கலோரி எரிக்கப்படுகிறது.
இது ட்ரெட்மில்லில் 15 நிமிடம் ஓடுவதாலும்…
மைதானத்தில் 30 நிமிடம் ஓடுவதாலும் கிடைக்கும் பயனுக்கு இணையானது.
உச்சநிலையை அடையும்போது எண்டார்பின்ஸ் (Endorphins) ஹார்மோன் சுரக்கிறது.
இது மனமகிழ்ச்சி மற்றும் திருப்தி உணர்வை அளிக்கும். இதனால் உடல்வலி மற்றும் மூட்டுவலி ஏற்படாது.
மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தையும் குறைக்கிறது.
இந்த ஹார்மோன் அடிக்கடி சுரந்து கொண்டிருந்தால் நமது வாழ்நாள் நீட்டிக்கும். ஆண்களுக்கு மட்டுமல்ல… பெண்களுக்கும் இந்த ஹார்மோன் பயனளிக்கிறது.
சமீபத்திய ஆராய்ச்சியின்படி
தகுந்த இடைவேளையில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பகத்தில் கட்டியிருந்தால் கூட, அக்கட்டி புற்றுநோயாக மாறாமல் இருப்பதாக தெரிவிக்கிறது.
பெண்களுக்கும் செக்ஸ் உச்சநிலையின் போது எண்டார்பின்ஸ், ஆக்சிடோஸின், DHEA ஆகிய ஹார்மோன்கள் சுரந்து, உடல் மற்றும் மனதுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
மூளை, மூட்டு மற்றும் ஜனன உறுப்பு ஆகிய மூன்றும் நலமாக இருக்கும் போதே சலிக்கும் வரை செக்ஸில் ஈடுபட்டு விட வேண்டும். இல்லையென்றால் இழப்பு உங்களுக்குத்தான்.
அடிக்கடி செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சியான மன நலத்தையும் பெறலாம்.
செக்ஸ் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும் ஒரு #டானிக்!

0 Comments
YOUR COMMENT THANKYOU