Subscribe Us

header ads

கணவன் மனைவி உறவு எப்போதும் இன்பமாக நீடிக்க இதோ...

கணவன் மனைவி உறவு எப்போதும் இன்பமாக நீடிக்க இதோ... 
உண்மையான வாழ்க்கை உயர்வு தரும்...
இன்றைய இயந்திர வாழ்க்கை...
கணவன் ஒரு புறம் மனைவி ஒரு புறம் எப்போதும் வேலை வேலையென...
அதுவும் அலுவலக வேலையை விட வியாபார நண்பர்களின் வேலை மிக அதிகம்...

இதனால் நாம் தினசரி தொலைப்பதில்  சில... 
குழந்தைகளை கொஞ்சுவது, கணவன் மனைவி இருவரும் அன்பாய் பேசிக்கொள்வது மற்றும் ஒருவருக்கு ஒருவர் கருத்து பரிமாற்றம் ...

இதனால் ஏற்படும் விளைவுகள்...
குடும்பத்தில் கணவன் மனைவி சண்டை , குடும்பத்தில் நிம்மதியின்மை, பெரியவர்கள் பெற்றோகள் அரவணைப்பு குறைதல், குழந்தைகளிடம் நம் பாசம் குறைதல், குழந்தைகளுக்கும் நம் மீது வைக்கப்படும் பாசம் குறைதல். 

இப்போது கூடுதலாக சமூக வலைதளங்கள் மற்றும் பொழுதுபோக்கு வலைதளங்கள் மேலும் பிரிவினை உண்டாக்குகிறது. 
ஆம்... குடும்பத்தில் பேச்சுகள் குறைந்து கணினியிலும், செல்போன்னிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டோம்...

திருத்தப்படுதல் ...
கணவன் மனைவி இருவரும் அனைத்து வேலையும் முடிந்த பின் தினமும் இரவு ஒரு மணி நேரம் கணினி, தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளுங்கள் மற்றும் கருத்து பரிமாறிக்கொள்ளுங்கள்...
பேச ஒன்றுமே இல்லை என போலி சாக்குகள் சொல்ல வேண்டாம் . மனைவி குடும்பத்தில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளும் சொல்லவேண்டும் ( சண்டை மட்டுமே சொல்லக்கூடாது ).
கணவன் வெளியில் நடக்கும் நிகழ்வுகளை மனைவியிடம் பரிமாற வேண்டும். 
வெளிநாடுகளில் இருக்கும் கணவன் அல்லது மனைவி கணினி உதவியுடன் ஊரில் இருக்கும் கணவன் அல்லது மனைவியுடன் இதுபோலவே கருத்துக்களை பரிமாறலாம்...

பயன்கள் ...
கணவன் மனைவி ஒற்றுமையும் அன்பும் என்றும் நிலைக்கும். குடும்பத்தில் சண்டைகள் அதிக அளவில் குறையும் நட்புகளே...
குடும்பத்தில், கணவன், மனைவி , குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சந்தோசமாய் நிம்மதியாய் வாழலாம்...

உண்மையான வாழ்க்கை உயர்வு தரும்...
மகிழ்ச்சியாய் வாழ்வோம் நட்புகளே ...
சிஷ்யன்

Post a Comment

0 Comments