Subscribe Us

header ads

திருமணம் நடந்த பின்பு பெண் அடுத்து எதிர் கொள்ளும் கேள்வி, ‘விசேஷம் ஏதாவது உண்டா?’

♥திருமணம் நடந்த பின்பு பெண் அடுத்து எதிர் கொள்ளும் கேள்வி, ‘விசேஷம் ஏதாவது உண்டா?’ என்பதுதான்! ஒவ்வொரு பெண்ணும் இந்த கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டியதிருக்கிறது.

♥கேள்வி ஒருவித தயக்கத்தைமயும் எரிச்சலையும் ஏற்படுத்தினாலும், திருமணம் செய்துகொண்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது ஒரு வரப்பிரசாதம்.

♥திருமண பந்தம் பாலியல் ஆசையை மட்டும் தீர்த்துக் கொள்வதற்காக ஏற்படுவதல்ல. நமக்குப்பின் நமது பெயரை சொல்ல ஆரோக்கியமான வாரிசுகள் வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகளை பெறுவது என்பது ஒரு வரம். இதற்கு அந்தப்பெண் உடல் அளவிலும், மனதளவிலும் தயாராக வேண்டும்.

♥சிலருக்கு பிறவியிலேயே உடல் ஊனமாகவும் பிறவிக் கோளாறுகளுடனும் குழந்தைகள் பிறப்பதும், அதை நினைத்து அதன் பெற்றோர் ஆயுள் முழுவதும் கண்ணீர்விடுவதும் உண்டு. அதுபோன்ற குழந்தைகள் பிறக்காமல் இருப்பது முழுக்க முழுக்க பெற்றோர்களின் திட்டமிடுதலில்தான் உள்ளது. ஆணும், பெண்ணும் சேர்ந்தால் கருத்தரித்து குழந்தை பெற்று விடலாம். ஆனால் திட்டமிட்டு கருத்தரித்தால் ஊனமில்லாத ஆரோக்கிய குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். பெற்றோர்களின் பழக்க வழக்கங்கள், உடல் நலம், பணியிடச் சூழ்நிலைகள் கூட கருவின் வளர்ச்சியை பாதிக்கும். இதுகூட பல தம்பதிகளுக்கு தெரிவதில்லை.

♥கர்ப்பத்தின் தொடக்க காலம் மிக முக்கியமான காலமாகும். கருத்தரித்த 12-வது வாரத்துக்குள் குழந்தையின் மூளை, இதயம் உள்ளிட்ட உறுப்புகள், நரம்பு மண்டலம் போன்றவை உருவாகி விடுகின்றன. இந்த கால கட்டத்தில் சில பெண்கள் தங்கள் அறியாமையால் தாங்கள் கர்ப்பமாக இருப்பதையே தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட அறியாமை தவிர்க்கப்படவேண்டும்.

♥#ஒருபெண்_தான்_தாயாகும்_முன்பு..

♥- தமக்கு கருத்தரிக்க ஏற்ற வயது இருக்கிறதா...?

-♥ அம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளதா...?

♥- கணவருக்கும்- தனக்கும் ரத்த பொருத்தம் இருக்கிறதா?

♥- மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தலாமா?

-♥ பரம்பரையாக வரும் நோய் பாதிப்புகள் என்னென்ன?

♥- கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டிருந்தால், அதை அகற்ற வேண்டிய காலம் எது?

♥- கணவருக்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருந்தால் என்ன செய்வது?

♥- எப்போது கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது? என்பதை எல்லாம் அறிந்து தாய்மைக்கு திட்டமிட வேண்டும்.

♥பெண்கள் கூடுமானவரை 30 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். 30 வயதுக்குமேல் கருத்தரிக்கும் வாய்ப்பு கணிசமாக குறைந்துவிடுகிறது. உடலின் மற்ற உறுப்பு களைவிட பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் வேகமாக முதிர்ச்சி அடைந்து விடுகின்றன. நடுத்தர வயதிலேயே மாத விலக்கு நின்று அதன் பின் கருத்தரிக்க முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. பெண்ணின் வயதை பொறுத்து அவளது கரு முட்டைகளும் பாதிக்கப்படுகின்றன. உடல் ரீதியாக கருப்பை முதிர்ந்துவிடும் நிலை கருத்தரிப்பதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

♥கணவருக்கும், மனைவிக்கும் ஒரேவகையான ஆர்.எச்.ரத்தக்கூறு இருந்தால் நல்லது. கணவருக்கு பாசிட்டீவ்வாகவும், மனைவிக்கு நெகட்டீவ் ஆகவும் அல்லது கணவருக்கு நெகட்டீவ்வாகவும், மனைவிக்கு பாசிட்டீவாகவும் இருந்தால் பிறக்கும் குழந்தையை அது பாதிக்கும். பெரும்பாலும் முதல் குழந்தை பாதிக்கப்படாவிட்டாலும், அடுத்தடுத்த குழந்தைகள் பாதிக்கப்படலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் மாற்று வழியை நாடலாம். பெண்கள் நாட்பட்ட நோய்களுக்காக ஏதாவது மருந்து, மாத்திரை எடுக்கும் பழக்கமுள்ளவராக இருந்தால் கருத்தரிக்க திட்டமிடும் முன்பே அதைப்பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். வலிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தால் இதுபற்றியும் டாக்டரிடம் கூறி ஆலோசனை பெறுவது அவசியம்.

♥தாய்மையடைய தயாராகும் ஆணும், பெண்ணும் கூடுதலாக தெரிந்துகொள்ள வேண்டியவை:

♥ஆணின் உயிரணு 48 மணி முதல் 72 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். பெண்ணின் கருமுட்டை வெளியான பிறகு 24 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருக்கும். பெண்கள் கருத்தரிக்க வேண்டுமென்றால் 24 மணி நேரத்தில் ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்துவிட வேண்டும். அப்போதுதான் கருத்தரிப்பு சாத்தியமாகும்.

♥பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்காவதற்கு 14 நாட் களுக்கு முன்பு கருமுட்டை வெளியாகிறது. பெண்ணின் உடல் சூட்டை வைத்து கரு முட்டை வெளியாவதை கண்டறியலாம். கருமுட்டை வெளியான பிறகு உடல் வெப்பம் சற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கும்.

♥இனச்சேர்க்கை நடந்த உடனேயே கருத்தரித்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். சிலருக்கு குறைந்த நாட்களிலேயே கருத்தரித்து விடுவதும் உண்டு. உடனடியாக கருத்தரிக்காமல் சில வருடங்கள் தள்ளிப்போவதும் உண்டு. பெண் களுக்கு கருக்குழாய் அடைப்பு, கரு முட்டை முதிர்ந்து வெளி வராமை போன்ற காரணங் களாலும் கருத்தரிப்பு தள்ளிப்போகலாம்.

♥கணவருக்கு உயிரணு குறைபாடுகள், விரைப்பையில் உயிரணுக்கள் உருவாகாதநிலை, விந்து நாள அடைப்புகள் போன்றவை காரணமாகவும் கருத்தரிப்பது தள்ளிப்போகலாம். சில வேளைகளில் உளவியல் பிரச்சினை காரணமாகவும் கருத்தரிப்பது காலதாமதமாகும். எந்தவிதமான சிக்கலாக இருந்தாலும் உரிய மருத்துவரை அணுகினால் நவீன மருத்துவத்தின் மூலம் இவற்றை எல்லாம் சரிப்படுத்தி விடலாம்.

♥தாயாகும் முன்பே அதற்கான அடிப்படை விஷயங்களை பெண்கள் தெரிந்துகொண்டு, உடல் அளவிலும், மனதளவிலும் தயாரானால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்

Post a Comment

0 Comments