பால் வகைகள் – பருத்தி விதை பால், ஆலம் பால், தேங்காய் பால்.
பழ வகைகள் – நெல்லிக்கனி, அத்திப்பழம், ஆலம் பழம், திராட்சைப் பழம், வாழைப்பழம்.
பருப்பு வகைகள் – பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, சுரை விதை பருப்பு, பூசணி விதை, வெள்ளரி விதை பருப்பு, எள், உளுந்து, கடலைப் பருப்பு.
கிழங்கு வகைகள் – உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, நிலப்பனங்கிழங்கு, தண்ணீர்விட்டான்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு.
கீரை வகைகள் – முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, கொத்தமல்லிக்கீரை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, இவைதவிர எண்ணற்ற மூலிகைகளும், கடைச்சரக்கு வகைகளும், பாலியல் ஆற்றலைப் பெருக்குவதற்கு உதவுகின்றன.
பருவ வயதுக் கிளர்ச்சிகளால், சுயஇன்பப் பழக்கத்தில் இறங்கி, நாளடைவில் கட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டு, அதில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் ஆண்களும் பெண்களும் ஏராளம். ‘MASTURBATION’ எனப்படும் சுயஇன்பப் பழக்கம், முதலில் வேலைக்காரனைப்போல் நெருங்கிவந்து, பின்னர் எஜமானாகிவிடுகிறது. இந்நிலையை ‘ADDICTION’ என்கிறோம், தினசரி சுயஇன்பத்தில் ஈடுபடுதல், ஒரே நாளில் பல தடவை ஈடுபடுதல், எதிர்பாலினரை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால்கூட, உணர்ச்சிவசப்பட்டு சுயஇன்பம் காண தனிமையை நாடுவது என்ற நிலையை ‘சுயஇன்ப அடிமைத்தனம்’ எனலாம்.
இயற்கைக்குப் புறம்பான வழிகளில் அல்லது, வக்கிரமான வழிகளில் அல்லது சுயஇன்பப் பழக்க அடிமைத்தனம் மூலமாக பாலின்பம் அடைவதால் என்ன கேடுகள் ஏற்படும் என்பதை ஹோமியோ, சித்தா, ஆயுர்வேதம் உள்பட, அனைத்து இயற்கையான மருத்துவங்களும் பட்டியலிடுகின்றன. இதிலிருந்து மீளவும், இதனால் ஏற்பட்ட உளவியல், உடலியல் பாதிப்புகளில் இருந்து நலம் பெறவும், மாற்றுமுறை மருத்துவங்கள் வழிமுறைகளை, சிகிச்சைகளை முன்வைக்கின்றன. அவை மட்டுமே பாலியல் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியவை.
ஆண் – பெண் பாலியல் நலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, ஹோமியோபதி மருத்துவத்தில் பலவிதமான ஆற்றல்மிக்க மருந்துகள் பயன்படுகின்றன. அவற்றில் ஒருசில..
அக்னஸ்காஸ்டஸ் – நீண்டநாள் சுயஇன்பப் பழக்கத்தின் விளைவாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுதல், உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்தே இருத்தல்.
பிளாட்டினா – பருவமடையும் முன்னரே சுயஇன்பப் பழக்கத்துக்கு அடிமையாதல், தூக்கத்தில் சுயஇன்பப் பழக்கத்தில் ஈடுபடுதல்.
கோனியம் – நீடித்த தொடர்ந்த சுயஇன்பப் பழக்கத்தின் விளைவாக தானாக விந்து ஒழுகுதல், பெண்கள் யாராவது அருகில் இருந்தால் அல்லது தொட்டுவிட்டால் அல்லது பெண்களுடன் பேசினால் விந்து ஒழுகுதல், கடும் சோர்வடைதல்.
நேட்ரம் மூர் – மணமாகியிருந்தும், வேறு ஆண் அல்லது பெண்ணை விரும்புதல்.
ஆசிட் ஃபுளோர் – ஒரே பெண்ணிடம் திருப்தி அடையாமல், பல பெண்களை விரும்பும் அதிக காமம்.
லைகோபோடியம் – வயதானவர்களின் ஆண்மை குறைவு.
பாஸ் ஆசிட் – மிதமிஞ்சிய உடலுறவால் அல்லது சுயஇன்பத்தால் பலவீனம், கடுமையான நரம்பு தளர்ச்சி.
ஹையாசியாமஸ் & ஸ்டிரமோனியம் – அடக்கமுடியாத காமவெறி உள்ள பைத்தியம். ஆபாச பாட்டு, பேச்சு, பிறப்பு உறுப்புகளைக் காட்டுதல், ஆடை அவிழ்ப்பு.
பிக்ரிக் ஆசிட் – அதிக சுயஇன்பப் பழக்கத்தால் முதுகுத்தண்டு பாதிப்பு, உடல் முழுவதும் களைப்பு, கைகளிலும் கால்களிலும் கனத்த உணர்வு, அதீத காம உணர்வு.
ஸ்டாபிசாக்ரியா – சுயஇன்பப் பழக்கத்துடன் எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், தாழ்வு மனப்பான்மை, குழி விழுந்த முகம், சிறு விஷங்களுக்கும் கோபம் – எரிச்சல், தனிமையை மட்டுமே விரும்புதல், இரவுகளில் விந்து ஒழுகுதல், முதுகு, இடுப்பு வலி ஏற்படுதல்.
ஓரிகானம் – பிறப்புறுப்பில் கடுமையான நமைச்சல் காரணமாக பாலுணர்வு தூண்டப்பட்டு, பெண்கள் சுய இன்பம் காணுதல்.
ஜிங்கம் மெட் – மாதவிலக்கு நாள்களில் சுயஇன்பத்தில் ஈடுபடுதல்.
காலி புரோமேட்டம் – சுயஇன்பத்தின்போதோ, பின்னரோ வலிப்பு ஏற்படுதல். முழுமையான ஞாபகமறதி, அறிவுத்திறன் மழுங்குதல், கால்களில் கடும் பலவீனம், நிமிர்ந்து நிற்க இயலாத நிலை.
இக்னேஷியா – காதல் தோல்வியால் மீளமுடியாத ஆழ்ந்த சோகத்தில் மூழ்குதல்.
பாலியல் நலம் சார்ந்த எண்ணற்ற உடல், மன பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, பக்கவிளைவுகள் இல்லாத ஹோமியோபதி மற்றும் மலர் மருத்துவம் மிகச் சிறந்த முறையில் பயன் அளிக்கின்றன.

0 Comments
YOUR COMMENT THANKYOU