காரணம் #1: பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி, அப்பகுதிக்கு நல்ல குஷன் போன்று இருக்கும் மற்றும் தீவிரமான உடலுறவின் போது உராய்வு ஏற்படுவதைத் தடுக்கும்.
காரணம் #2: பிறப்புறுப்பை ஷேவிங் செய்யும் போது, அதன் வடிவம் மற்றும் நிலையினால் பல காயங்களை சந்திக்கக்கூடும். மேலும் ஷேவிங் செய்த பின் கடுமையான அரிப்புக்களை அனுபவிக்கக்கூடும்.
காரணம் #3: பிறப்புறுப்பை ஷேவிங் செய்வதால், அவ்விடத்தில் சீழ் பிடித்த பருக்கள் அதிகம் வரக்கூடும்.
காரணம் #4: பிறப்புறுப்பில் வளரும் முடி, உடலுறவினால் இனப்பெருக்க உறுப்பு மருக்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும்
காரணம் #5: பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியில் உள்ள இயற்கை எண்ணெய், இயற்கை உராய்வுப்பொருளாக செயல்படும்.
காரணம் #6: முக்கியமாக பிறப்புறுப்பில் வளரும் முடி நல்ல பாதுகாப்பை வழங்கும் மற்றும் உடலின் வெப்ப நிலையை சீராக பராமரிக்க உதவும்.
காரணம் #7: பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் பாலியல் நோய்களின் தாக்கம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். முக்கியமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் வேகமாக தாக்கும்.
இருப்பினும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி உங்களுக்கு தொந்தரவாக இருப்பின், ட்ரிம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான, அதே சமயம் பாதுகாப்பை வழங்கும் ஓர் வழியும் கூட

0 Comments
YOUR COMMENT THANKYOU