Subscribe Us

header ads

ஆண்குறி_மற்றும்_பெண்குறியி #வரும்_அனைத்துவகையான #புண்கள்_குணமாக…

#ஆண்குறி_மற்றும்_பெண்குறியி 
#வரும்_அனைத்துவகையான 
#புண்கள்_குணமாக…❓❓❓❓

#வீட்டு_கை_வைத்தியம்…❓❓❓
ஆண் குறியில் புண், அரிப்பு, நமைச்சல்,ஆண்குறியில் பரு ஆகியன பாலியல் நோயின் வெளிப்பாடாய் அமையும்.
பாலுறவு மூலம் கடத்தப்படும் நோய்த்தொற்று, மற்ற பாக்டீரியா நோய்த் தொற்றுகள் அல்லது தோல் எரிச்சல் மற்றும் சில குறிப்பிட்ட தோல் நிலைமைகள், உள்படப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் அனைத்தும் குணமாகும்.

⭕ #தேவையான_பொருட்கள்❓

சாம்பார் வெங்காயச் சாறு – 30 மி.லி

கோவைக்காய் சாறு – 30 மி.லி

பசும்பால் – 100 மி.லி

சீரத்தூள் – 20 கிராம்

அம்மான் பச்சரிசிப்பொடி – 10 கிராம்

     அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வெள்ளை, வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, மலம் கழிக்கையில் விந்து கழிதல், ஆண்குறிப் புண் ஆகிய தீரும். மருந்துண்ணும் ஒருவார காலமும், உப்பு, புளி, காரம், பெண் போகம், புகை பிடித்தல், மதுபானம் ஆகியவற்றை அறவே நீக்கவும்.

💊 பரங்கிபட்டை சூரண பொடி காலை,மாலை உணவுக்கு பின் தினசரி 1/2 டீஸ்பூன் சாப்பிடவும்.

💊 நன்கு முற்றிய தேங்காயை 
அரைத்து பாலெடுத்து அதில் சிறிது 
மஞ்சள் தூள் சேர்த்து கழுவிட 
ஆண்குறிப்புண் குணமாகும். இதையே உள்ளுக்கும் சாப்பிடலாம்.

💊 அகத்திக்கீரை, தேங்காய் 
இரண்டையும் மஞ்சள் சேர்த்தரைத்து, தேங்காய் எண்ணெய்யில் குழப்பி போட ஆண்குறிப்புண் தீரும்.

💊 சர்க்கரை வியாதியினால் (Diabetes) உண்டாகும் ஆண்குறிப் புண் தீர, 
யானை நெருஞ்சில் இலையை சிறிது 
மஞ்சள் சேர்த்தரைத்து கசாயமாக 
சாப்பிட மறையும்.

💊 துத்திவித்துடன் மஞ்சள் 
சேர்த்தரைத்து போட ஆண்குறிப்புண் 
மறையும்.

💊 படிகார நீரில் மஞ்சள் சேர்த்து ஆண்குறியை கழுவ புண் குணமாகும்.

💊 கடுக்காயுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கசாயம் செய்து, கழுவ ஆண்குறிப் புண் ஆறும்.

💊 அத்திப்பழத்துடன் சிறிது மஞ்சள் 
சேர்த்து, வேகவைத்துக் கடைந்து 
சாப்பிட ஆண்குறிப்புண் மறையும்.

💊 நாட்டு மருந்துக்கடைகளில் 
கிடைக்கும் “மத்தன் தைலம்” வாங்கி 
புண்ணில் போட மறையும். இத்தைலம் ஊமத்தை இலையில் தயார் 
செய்யப்படுகிறது.

💊 நாட்டு மருந்துக்கடைகளில் 
கிடைக்கும் புங்க தைலம் ஆண்குறி 
புண்ணை குணமாக்கும்.

💊 மணத்தக்காளி கீரையை சூப்பாக செய்து சாப்பிட்டு வர ஆண்குறி புண் 
மறையும்.

💊 1 டீஸ்பூன் வெண்ணைய், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.

💊 குப்பைமேனி. இந்த செடியின் இலைகள், சிறிது மஞ்சள், சிறிது கல்லுப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து அரிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி அது காய்ந்த பின் குளித்து வர அரிப்பு குணமாகும்.

💊 வேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனுடன் 3 வெங்காயம் சேர்த்து அரைத்து அரிப்புள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து இதமான வெந்நீரில் குளித்து வந்தால் அரிப்பு நீங்கும்.

💊 20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீரில் நன்றாக காய்ச்சி, அது 200 மில்லி அளவாக சுண்டியதும் காலையில் 100 மில்லி மாலையில் 100 மில்லி அளவு குடித்து வர அரிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான ஆண்குறி வியாதிகளும் நீங்கும்.

💊 அருகம் புற்களை அரைத்து சாறாக குடித்தும், அதில் சில துளிகளை அரிப்புள்ள இடங்களில் பூசி வரவும் அரிப்பு குணமாகும்.

💊 வினிகர் ஒரு கப் வினிகரில் 4 கப் நீரை சேர்த்து கலந்து, அந்நீரால் அந்தரங்க உறுப்பை கழுவ வேண்டும். இப்படி தினமும் கழுவி வர, அந்தரங்க பகுதியில் அரிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

💊 ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.

💊 கற்றாழை ஜெல்லை பகுதியில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்பட்ட சரும வடுக்கள், எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகி விடும்.

கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூனில் எடுத்து, அதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் அந்தரங்க பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் தடவி மசாஜ் செய்து வர அரிப்புக்களை அடங்கிவிடும்.

கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்

💊 #டீ_ட்ரீ_ஆயில்

சுத்தமான டீ-ட்ரீ ஆயிலை 3 துளிகள் எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் ஒரு பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, அந்த எண்ணெயை அந்தரங்க பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், விரைவில் அரிப்புக்கள் அடங்கும்.

💊 #பூண்டு

5-6 பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு, 1/2 கப் ஆலிவ் ஆயிலில் போட்டு ப்ரை செய்ய வேண்டும். பூண்டின் நிறம் மாறிய பின், அதனை இறக்கி எண்ணெயை குளிர வைத்து, அந்த எண்ணெயை அரிப்புள்ள இடத்தில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அரிப்புக்கள் வேகமாக அடங்கும்.

💊 #தேன்

தேனை அந்தரங்க பகுதியில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர, அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்புக்கள் போய்விடும்.

⭕ #தடுக்கும்_முறைகள்

இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.

குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள்.

நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.

உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள்.

பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.

இந்த இயற்கை வழிகளை பின்பற்றி எளிதாக ஆத்குறி மற்றும் பெண்குறி பகுதியில் ஏற்படும் அரிப்பை, சரும பிரச்சினைகளை சரி செய்யலாம்.

Post a Comment

0 Comments