#நோய்களில்……❓❗
#உலகளவில்_முதன்மையானது
#மார்பகப்_புற்றுநோய்…❗❓
👉 பெண்களுக்கு ஏன் மார்பக புற்றுநோய் வருகிறது……❓
👉 மார்பக புற்றுநோய் கட்டியா எனக் கண்டறிவது எப்படி❓
👉 என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.❗❗
செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம்.
#முக்கிய_குறிப்பு
பெண்கள் மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
♦--->> மார்பக புற்றுநோய் தற்போதைய காலத்தில் மிகவும் மோசமான ஒரு நோயாகி வருகிறது. இதனால் அதிக அளவில் பெண்கள் இறக்கின்றனர். தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் இந்த நோயை எளிதில் குணப்படுத்தலாம்.
மார்பக புற்றுநோய் என்பது வீரியம் மிக்க கேடு விளைவிக்கும் மார்பக தசைகளின் வளர்ச்சி.
இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
பெண்களைப் பாதிக்கும் மிகமுக்கிய நோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இந்நோயை முழுமையாகக் குணப்படுத்தும் சிகிச்சை பற்றிய ஆய்வுகள் ஒருபுறம்
நடந்துகொண்டிருக்க, இது ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. காரணங்களை அறிவதன்மூலம் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதுடன் நோய் பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்பதுதான் இதன் அடிப்படை.
அதில், 35 வயதைத் தாண்டி முதன்முறையாகக் குழந்தை பெறும் பெண்களுக்கு, வருங்காலத்தில் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்கிறது அந்த ஆய்வு. கடந்த சில மாதங்களுக்கு இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதுபோன்று ஏராளமான ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
👉இதன் நம்பகத்தன்மை பற்றி அறிய………
#மார்பகப்_புற்றுநோய்_வருவதற்கான
#சில_காரணங்களும் #சூழல்நிலைகளும்❗❓
1, ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், அவர்களின் சந்ததியினர் பாதிக்கப்படலாம். உறவுகளில் குறிப்பாக, அம்மா, உடன்பிறந்தவர், குழந்தை போன்றோருக்கு அவரவர்களின் மெனோபாஸூக்கு முந்தைய காலத்தில் மார்பகப் புற்று இருந்திருந்தால், உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது.
2, ஏற்கெனவே ஒருமுறை புற்றுநோய்
பாதித்திருந்தால், மீண்டும் வர வாய்ப்பு அதிகம். இவர்கள், தொடர் பரிசோதனைகளைத் தவிர்க்கக் கூடாது. மருத்துவரின் அறிவுரையுடன் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மார்பகத்தில் மேமோகிராம் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்.
3. சிறுவயதில் ஏதேனும் பாதிப்பு காரணமாகத் தீவிர கதிரியக்க சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்தால், வருங்காலத்தில் புற்றுநோய் ஏற்படலாம். இந்தப் பாதிப்பு ‘ஹாட்ஜ்கின்’ஸ் நோய்’ (Hodgkin’s ailment) எனக் கூறப்படுகிறது. மற்றவர்களைக் காட்டிலும், கதிரியக்கத்துக்கு உட்பட்டவர்களுக்குப் புற்றுநோய் வர 10 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. மார்புப் பகுதியில் அதிக கதிரியக்க சிகிச்சைக்குச் செய்தவர்களும், எட்டு முதல் பத்து வயதுக்குள் கதிரியக்க சிகிச்சைக்கு உட்பட்டவர்களும் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.
4. 11 வயதுக்கு முன்பே பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு, ‘ஈஸ்ட்ரோஜென்’ சுரப்பு அதிகமாக இருக்கும். அதனால், வருங்காலத்தில் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். இந்தக் குழந்தைகளுக்கு மற்றவர்களை விடவும், இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது.
5. ‘மெனோபாஸ்’, சரியான வயதில் வராமல், இயல்பைவிடத் தள்ளிப்போனாலும், மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். 55 வயதைக் கடந்து மெனோபாஸ் ஏற்படும் பெண்களுக்கு, புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம். மற்றவர்களை விடவும், இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால், கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.
6. 30 அல்லது 35 வயதுக்குப் பிறகு, முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும்.
7. வாழ்நாள் முழுவதும், கர்ப்பம் அடையாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடும்.
8. இரவுப் பணியில் அதிகம் வேலைசெய்யும் பெண்களுக்கு, ‘மெலோடினின்’ ஹார்மோன் சுரப்பு குறையத்துவங்கும். இது சில வருடங்களை வரை தொடர்ந்தால், மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம்.
9. மாசு கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் பெண்களுக்கும், வாய்ப்பு அதிகம். குறிப்பாக, வாகன நெரிசல்களுக்கு மத்தியில் நீண்டகாலம் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரலாம்.
10. புற்றுநோய்க்கான காரணிகளில் குறிப்பாக ‘#ஆடட்_எக்ஸ்போஸர்’
(Added Exposure) என்பது பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
சிலநேரங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இணைந்து மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும்.
முதல் குழந்தையை தாமதமாகப் பெற்றுக்கொள்வது, கர்ப்பம் தரிப்பதற்கான தொடர் சிகிச்சையை நீண்டகாலம் பெறுவது, அந்த சிகிச்சைகள் அனைத்தும் தோல்வியில் முடிவது, மார்பகப் பகுதி அடர்த்தியாக இருப்பது (Dense Breasts), நீண்ட நாள்கள் அதிக காற்று மாசுபாட்டுக்கு உள்ளாவது, வாகனப்புகையைத் தொடர்ந்து சில வருடங்கள் சுவாசிப்பது போன்றவை. இவற்றில் பல காரணங்கள் இருந்தால், பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இப்படி மற்றொரு காரணியுடன் இணைந்துகொண்டு பிரச்னையை ஏற்படுத்தும் காரணிகள்தாம், ‘ஆடட் எக்ஸ்போஸர்’. எனவே, இதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
உடல் பருமனைக் குறைப்பது, தினமும் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது, வேலை செய்யும் நேரம் மற்றும் அமைப்பு போன்றவற்றை நெறிப்படுத்துவது, குழந்தைப் பிறப்பை முப்பது வயதுக்கு முன்னரே திட்டமிட்டுக்கொள்வது, குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுப்பது போன்றவற்றைச் சரியாகப் பின்பற்றினால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்”
புற்றுநோயைப் பொறுத்தவரை, முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டியது அவசியம்.
எனவே, பெண்களே உங்கள் உடல்நலனில் இன்றுமுதல் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஐம்பது வயது மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்து பார்க்கவும்.
இருபதைத்தாண்டிய பெண்கள், மார்பகத்தைச் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஏதேனும் மாற்றம் தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
#மார்பகப்புற்றுநோய்
#அறிகுறிகள்❓
1.மார்பகம் வழக்கத்திற்கு மாறாக சிவந்திருப்பது.
2.மார்பக அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம்.
3.நிப்பிள் பகுதியிலிருந்து திரவம் வெளியேற்றம்.
4.அக்குள் பகுதியில் வீக்கம்
5.மார்பக தசை (அ). தோல் கடினமாவது.
6.மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல்.
7.மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.
8.மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல்.
9.உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.
10. மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் நெரிக்கட்டு ஏற்படுதல்.
11.மார்பக அமைப்பில் ஏற்படும் மாற்றம்.
12.மார்பக காம்புகளிலிருந்து இரத்தத்துடன் கலந்து கசிவு.
13.மார்பக காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல்
மார்பகத் தோலில் ஏற்படும் சுருக்கம்.
சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது.
வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
#பரிசோதனை_முறைகள❓
1.மாதமொருமுறை மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
2.ஆண்டிற்கு ஒரு முறை மார்பகங்களை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
3. மார்பக எக்ஸ்ரே (மெமோகிராபி) எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
🔴 பெண்கள் தாமே செய்து கொள்ள எளிதான மார்பக சுய பரிசோதனை
முறை விளக்கம.❓❓❓
1. இடுப்பளவிற்கு துணிகளை இறக்கிவிட்டு பின்பு நின்றோஅல்லது உட்கார்ந்தோ கண்ணாடி முன் மார்பகங்களை கவனிக்கவும். கைகளை இருபுறமும் தளர்த்தி வைத்துக் கொள்ளவும். மார்பகத்தின் அமைப்பிலோ அல்லது தோற்றத்திலோ மாற்றம் உள்ளதா என்று கவனிக்கவும்.
இதே முறையில் கைகளை தலைக்குமேல் உயர்த்தி மார்பகங்களில் மாற்றம் உள்ளதா அல்லது மார்பகக் காம்புகளில் கசிவு உள்ளதா என்று கவனிக்கவும். பிறகு படுத்த நிலையில் தோள் அடியில் ஒரு மெல்லிய தலையனை வைத்து வலது கையால் இடது மார்பகத்தின் மேல் உள்ள பகுதியை பரிசோதனை செய்யவும்.
கைவிரல்களை சேர்த்த நிலையில் வைத்துக்கொண்டு வட்ட வடிவ முறையில் லேசாக அழுத்தி கட்டி தெரிகிறதா என்று பரிசோதனை செய்யவும். அதே முறையில் மார்பகத்தில் உள்ள கீழ் பகுதியை முறையாகப் பரிசோதிக்கவும்.
பின்னர் மார்பகத்தில் வெளி கீழ் பகுதியை லேசாக அழுத்தி பரிசோதனை செய்து கீழிருந்து மார்பகக்காம்பை நோக்கி வரவும். அதே முறையில் மார்பகத்தின் வெளிமேல் பகுதியிலிருந்து மார்பகக்காம்பு வரை பரிசோதனையை தொடரவும்.
மார்பகப் பரிசோதனைக்குப் பிறகு அக்குளில் நெரிகட்டி உள்ளதா என்று பரிசோதிக்கவும்.
பின்னர் இதே முறையில் இடது கையால் வலது மார்பகத்தையும் அக்குள் பகுதியையும் பரிசோதனை செய்யவும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU