Subscribe Us

header ads

திருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..?

♥திருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..?

♥காதல் திருமணம் அல்லது பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் எதுவாக இருந்தாலும் திருமணம் முடிந்த கையோடு வீட்டில் பெரியவர்கள் செய்யும் அடுத்த வேலை சாந்தி முகூர்த்தம்தான். அப்படி உடனே அவர்களை தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுத்த என்ன காரணம் தெரியுமா..? அதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

#நெருக்கம் : 
♥எந்த உறவாக இருந்தாலும் நெருக்கம் அதிகரித்தால்தான் அந்த உறவின் பலம் அதிகரிக்கும். நெருக்கம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அதற்கு தாம்பத்திய வாழ்க்கை மிகவும் அவசியம்.

#நீண்ட_வாழ்க்கை : 
♥திருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீட்டிக்கச் செய்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.

#மனஅழுத்தம்_குறையும் : 
♥இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கையில் எத்தனை கவலைகள், சண்டைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவற்றிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது, மன நிம்மதி கிடைக்கிறது எனில் அதற்கு இருவரின் இணைப்புத்தான் முக்கிய காரணம். அவர்களின் மன அழுத்ததைக் குறைக்க செக்ஸ் சிறந்த மருந்தாகவும் இருக்கிறது. தம்பதிகளுக்கு இது சிறந்த பலன். ஸ்ட்ரெஸ் பஸ்டர்.

#உணர்வுப்பூர்வமான_உறவு : 
♥இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது வெறும் உடலளவில் மட்டும் நெருக்கத்தை உண்டாக்காது. மனதளவிலும் உணர்வுப் பூர்வமான நெருக்கத்தை உண்டாக்கும். இந்த உணர்வுப் பூர்வமான காதலை உருவாக்க செக்ஸுக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது.

#காதலில்_கவனம் : 
♥பல தகாத உறவுகளுக்கு தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இல்லாததும் காரணமாக இருக்கின்றன. எனவே திருமண வாழ்க்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை உடைக்காமல் பார்த்துக்கொள்வதும் இந்த தாம்பத்திய வாழ்க்கைதான். இருவருக்குள் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் அவர்களுக்கு மற்றொருவர் மீது ஈர்ப்பு உண்டாகாது.

#காதலை_வெளிப்படுத்த_வாய்ப்பு : ♥நீங்கள் துணை மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பதைக் காட்ட உடலுறவும் நல்ல வாய்ப்பு. அவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை, காதல் அனைத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்த முடியும். எனவேதான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க தாம்பத்தியம் அவசியம் என்கின்றனர்.

Post a Comment

0 Comments