Subscribe Us

header ads

தாய்மார்கள் ஒழுங்காக தாய்ப்பால் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்?

தாய்மார்கள் ஒழுங்காக தாய்ப்பால் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்?
தாய்ப்பால் மார்பகத்தில் கட்டிக் கொண்டு தீவிர வலியை உண்டாக்கும். ஏன் உங்களால் எழுந்திருக்கவே முடியாமல் வேதனைக்குள்ளாகி விடுவீர்கள். அப்படியே மார்பக காம்பை சுற்றி அந்த பகுதியே கெட்டியாக, வலியுடன், சிவந்து காணப்படும்

காரணங்கள் 
முழுவதுமாக பால் கொடுக்காமல் இருப்பது, குழந்தையை சரியான நிலையில் அமர்த்தாமல் பால் கொடுப்பது, ப்ளூ, காய்ச்சல், இறுக்கமாக உடை அணிவது, பால் வற்றாமல் இருத்தல், மன அழுத்தம், தூக்கமின்மை, தூங்கும் போது மார்பக பகுதியை அழுத்தி படுத்தல் போன்ற காரணங்களால் பால் கட்டுதல் ஏற்படுகிறது.

அறிகுறிகள் 
சரியாக பால் சுரக்காமல் இருப்பது, சிவந்து காணப்படுதல், மார்பக பகுதியை சுற்றி வலி வேதனை, காய்ச்சல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் தீவிர மார்பக தொற்று ஏற்பட்டு முலையழற்சி ஏற்பட்டு விடும். எனவே இந்த பிரச்சினைக்கு கீழ்க்காணும் வீட்டு முறைகளை மேற்கொண்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்

பால் கொடுக்கும் முறை

பால் கொடுக்கும் முறையை மாற்றுவதன் மூலம் பால் கட்டுவதை தவிர்க்கலாம். பால் முற்றிலுமாக வற்றும் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவும்.உங்கள் குழந்தையின் பசி சீக்கிரம் அடங்கி விட்டால் பால் சேகரிக்கும் கருவி கொண்டு சேகரித்து வைத்துக் கொள்ளவும். குழந்தையை அமர்த்தி பால் கொடுக்கும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். மார்போடு அணைத்து குழந்தையின் தாடை மார்பகத்தை படும் படி வைத்து மார்பக காம்பை சுவைக்க விடவும். சரியான அமைப்பில் பால் கொடுப்பதன் மூலம் பால் கட்டுவதை தவிர்க்கலாம்.

மசாஜ்

உங்கள் கைகளைக் கொண்டே மார்பகத்தை நன்றாக மசாஜ் செய்து விடவும். ஆள் காட்டி விரல் மட்டும் பெருவிரலை வைத்து மார்பக காம்பின் வழியாக பாலை அமுக்கி எடுத்து சேகரிக்கலாம். இதன் மூலம் கொஞ்சம் ரிலீவ் கிடைக்கும்.

பூண்டு

பூண்டில் உள்ள ஆன்டிபயாடிக் முலையழற்சி வருவதை தடுக்கிறது. எனவே பச்சை பூண்டை நசுக்கி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் வலி குறையும். தேன் மற்றும் பூண்டை தண்ணீர் கலந்து பேஸ்ட்டாக்கி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டைகோஸ் ஒத்தடம்

முட்டைகோஸ் இலைகளை மைக்ரோவேவ் ஓவனில் லேசாக சூடுபடுத்தி மார்பக பகுதியில் வைத்து வெதுவெதுப்பாக மற்றும் குளிராக என்று மாறி மாறி 2-3 நிமிடங்கள் என்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என செய்து வர வேண்டும். பால் கட்டியுள்ள பகுதிகள் நிவாரணம் பெறும். குறிப்பு :முட்டைகோஸ் இலைகளை அதிகம் சூடாக்குவதை தவிர்த்து விடுங்கள்.

உருளைக்கிழங்கு ஒத்தடம்

பால் கட்டுவதால் ஏற்படும் அழற்சியை போக்க உருளைக்கிழங்கு ஒத்தடம் பெரிதும் பயன்படுகிறது. ப்ரஷ்ஷான உருளைக்கிழங்கை பிரிட்ஜில் சில மணி நேரம் வைத்து பிறகு அதை துருவி மார்பகத்தில் அப்ளே செய்ய வேண்டும். பிறகு ஒரு சுத்தமான துணியை கொண்டு சில நிமிடங்கள் மூடிக் கொள்ள வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என செய்து வந்தால் பால் கட்டுவதை தளர்த்து அழற்சி ஏற்படுவதை தடுக்கிறது.

விட்டமின் சி உணவுகள்

விட்டமின் சி உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளும் போது அழற்சி ஏற்படுவதை தடுத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சு, திராட்சை, பிரக்கோலி, தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, பச்சை மிளகாய், கிவி பழங்கள், பரங்கி காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தாலே போதும்அன்னாசி பழம் அன்னாசி பழத்தில் உள்ள புரோமெலைன் அழற்சியை தடுத்து பால் கட்டுவதை தடுக்கிறது. ஒரு நாளைக்கு என அன்னாசி பழம் ஜூஸ் பருகி வந்தால் பால் கட்டுவது சரியாகிவிடும். அதோடு குழந்தைக்கும் தாய்க்கும் அஜீரணக் கோளாறுகள் ஏதும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.

வினிகர்

வினிகர் இயற்கையாகவே ஒரு அமிலம் என்பதால் மார்பகத்தில் கட்டியுள்ள பாலை கலைத்து விடுகிறது. ஒரு காட்டன் பஞ்சில் வினிகரை நனைத்து மார்பக காம்புகளில் சில நிமிடங்கள் வைத்தாலே போதும் நல்ல தீர்வு கிடைக்கும்.

சூடான குளியல்

நல்ல வெதுவெதுப்பான நீரைக் கொண்டு ஊற்றி மார்பகத்தை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பு :அதிக சூடான நீரை பயன்படுத்தாதீர்கள். சருமம் பொத்து விடும் வாய்ப்புள்ளது.

நீர்ச்சத்து

ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தாலே போதும் பால் கட்டுதல், அழற்சி போன்றவை அண்டாது. இதுவரையில் உங்களுக்காக மட்டுமே தண்ணீர் குடித்திருப்பீர்கள். ஆனால் இனி உங்களுடைய குழந்தைக்காகவும் சேர்த்து குடிக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்

எப்சம் உப்பு

குளிக்கும் போது டப்பில் எப்சம் உப்பு சேர்த்து கரைத்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் பால் கட்டுதல் சரியாகி விடும். குறிப்பு : குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன் மார்பக காம்பை துடைத்து விட்டு கொடுங்கள். இதனால் உப்பின் சுவை இருக்காது.

டீ பேக்

சூடான கடும் டீ பேக் வைத்து மார்பக பகுதியை ஒத்தடம் கொடுப்பதன் மூலம் பால் கட்டியிருப்பதை கலைக்கலாம். கிரீன் டீ பேக்காக இருந்தால் இன்னும் சிறப்பு. அது மார்பகத் துளைகளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புத்துணர்வையும் தரும்.

சாம்பல் துகள்கள்

பாதிக்கப்பட்ட பகுதியில் செயலாக்கப்பட்ட கரித்தூளை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என அப்ளே செய்து வந்தால் அழற்சி, வீக்கம், பால் கட்டுதல் போன்றவற்றிலிருந்து விடுபடலாம். கரித்துகள்கள் கிடைக்காதவர்கள் மற்ற டிப்ஸ்களை முயற்சி செய்யலாம்.

ஜஸ் ஒத்தடம்

ஜஸ் கட்டியை நன்றாக நொறுக்கி ஒரு துணியில் கட்டி மார்பக பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால் பால் காட்டியிருப்பது தளர்ந்து தாய்க்கும் பால் நன்றாக ஊறும். மார்பகங்களும் நன்கு மென்மையாக இருக்கும். குழந்தைக்கு அசௌகரியம் உண்டாகாமல் இருக்கும்

லெசிதின்

லெசிதின் என்பது தாவர விலங்கிலிருந்து பெறப்பட்ட ஒரு வகை மஞ்சள் மற்றும் பழுப்பு நிற கொழுப்பு. எனவே இவை மார்பகத்தில் பால் கட்டுவதற்கு காரணமான கொழுப்பு அமிலங்களை உடைக்கிறது. எனவே இதை ஒரு நாளைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் என சாப்பிட்டு வந்தால் நல்லது. குறிப்பு- மருத்துவர் கூறும் அளவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

கற்றாழை

கற்றாழை ஜெல்லை மார்பக பகுதியில் தடவினால் பால் கட்டுதல், மார்பக காம்புகளில் இருக்கும் புண்கள், பிளவுகள் போன்றவை சரியாகி விடும். அதேபோல் மார்பகங்களில் ஏதேனும் பூஞ்சைத் தொற்றுக்கள், அழற்சி போன்றவை இருந்தாலோ அதை கற்றாழை சரிசெய்து விடும். மார்பகங்களும் பளபளப்பாகவும் தளர்ந்து போகாமலும் இருக்கும்.

விளக்கெண்ணெய்

ஒரு ஈரமான வெதுவெதுப்பான துணியில் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து மார்பக பகுதியில் வைத்து சூடான பேக் அதன் மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். பால் கொடுப்பதற்கு 20 நிமிடங்கள் முன்னாடி இதை செய்யவும்.சில மணி நேரத்திற்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெதுவாக மசாஜ் செய்து வந்தால் பால் கட்டுவதை தவிர்க்கலாம். குறிப்பு- விளக்கெண்ணெய்யை மார்பக காம்புகளில் தடவ வேண்டாம். பால் கொடுப்பதற்கு முன் நன்றாக துடைத்து விட்டு குழந்தைக்கு கொடுக்கவும். ஏனெனில் குழந்தைக்கு விளக்கெண்ணெய் எளிதாக சீரணிக்காது.

செய்ய வேண்டியவை

தொடர்ச்சியாக குழந்தைக்கு பால் கொடுத்து வந்தால் பால் கட்டுதல் ஏற்படாது மார்பக பகுதி மற்றும் காம்புகளை காற்றோட்டமாக வைத்திருப்பதன் மூலம் பால் சுரப்பை கட்டுப்படுத்தலாம். லேசாக சூரிய ஒளி உள்ளே போகும் படி மார்பகத்தை வைத்து இருந்தால் திசுக்கள் வலுவடையும். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏதுவான முறையில் பால் அமர்த்துவதை தேர்ந்தெடுங்கள்.

செய்யக் கூடாதவை

பவுடர், பெர்மியூம், டியோ ட்ரெண்ட் போன்ற நறுமண பொருட்களை பயன்படுத்தக் கூடாது. சோப்பை கொண்டு அடிக்கடி மார்பக காம்புகளை கழுவதை தவிருங்கள். இது புண்கள், பிளவுகள் ஏற்பட காரணமாகி விடும். 24 மணி நேரமும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதை தவிருங்கள்.

Post a Comment

0 Comments