Subscribe Us

header ads

விந்து கொஞ்சமா வர்றதுக்கு காரணம் என்ன தெரியுமா? நீங்க பண்ற இந்த ஒரே தப்புதான்...

விந்து கொஞ்சமா வர்றதுக்கு காரணம் என்ன தெரியுமா? நீங்க பண்ற இந்த ஒரே தப்புதான்...
நவீன காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நிறைய பேர்கள் குழந்தையின்மை பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். ஆண் பெண் இருபாலரும் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சனையாக இது பெருகி வருகிறது. நிறைய தம்பதிகள் தங்களுடைய விட்டமின் பி12 பற்றாக்குறையால் கருவுறுதலில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார்கள் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருவுற நிறைய தடவை முயற்சி செய்தும் பலனளிக்காததற்கு காரணம் இந்த விட்டமின் பி 12 பற்றாக்குறை தான் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே இந்த பற்றாக்குறையை எப்படி போக்கி விரைவில் குழந்தை பேறு அடைய முடியும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
   
விட்டமின் பி12 என்றால் என்ன?
விட்டமின் பி12 என்பது நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது நீரில் கரையக் கூடியது. இது மூளை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக வேலை செய்ய உதவுகிறது. நமது உடற் செல்களில் மெட்டா பாலிச தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியது. இது தான் கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் ஆர்என்ஏ, டிஎன்ஏ உருவாக்கத்திற்கு உதவக் கூடியது. எனவே இது கருவுறுதலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் ஆகும்.

விட்டமின் பி12 பற்றாக்குறை
இதன் பற்றாக்குறை ஆண் பெண் இருபாலருக்கும் மலட்டுத்தன்மை யை ஏற்படுத்துகிறது.

விட்டமின் பி12 பற்றாக்குறையின் 

#அறிகுறிகள்
வலிமையின்மை
நினைவாற்றல் இழத்தல்
மலட்டுத்தன்மை
அனிமியா
நரம்பு மற்றும் மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்.
   
#பாதிப்புகள் - ஆண்களுக்கு
விட்டமின் பி12 தான் விந்தணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே விட்டமின் பி12 அடங்கிய உணவுகளை உண்ணும் போது இந்த பிரச்சினையை சரி செய்யலாம். இதன் பற்றாக்குறையால்
விந்தணுக்கள் எண்ணிக்கை குறைதல்
விந்தணுக்களில் டிஎன்ஏ பாதிப்படைதல்
விந்தணுக்களின் வீரியம் குறைதல்
ஆண்மை இழப்பு
முந்தையே விந்தணுக்கள் வெளியேறுதல்

#பாதிப்புகள் - பெண்களுக்கு
விட்டமின் பி12 பற்றாக்குறையால் பெண்களுக்கு கருவுறுதல் தாமதமாகிறது.
ஓவுலேசன் ஒழுங்கற்று நடத்தல் (கருமுட்டை விடுப்பு)
செல்பிரிவில் பிரச்சினை
கருவுற்ற முட்டை கருப்பை சுவரில் இணைவதில் சிரமம் ஏற்படுதல்
எனவே இந்த பற்றாக்குறையை போக்க தினமு‌ம் 2.4 மைக்ரோ கிராம் விட்டமின் பி12 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

எதில் வைட்டமின் பி12 அதிகம் இருக்கிறது?
கருவுற அவசியமான விட்டமின் பி12 உணவுகள் கீழே உங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளனஇ அதை உங்களுடைய தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
சால்மன் மீன்கள்
மாட்டு கல்லீரல்
சிர்லோன் மாட்டிறைச்சி
சிப்பிகள்
யோகார்ட்
பால்
முட்டை
சிக்கன்
தானியங்கள்
ஹெட்டோக்
டூனா

#விட்டமின் பி12 மாத்திரைகள்
இரண்டு வகைகளில் இது மருந்து கடைகளில் கிடைக்கிறது. ஒன்று மெத்தில்கோபாலமின் மற்றொன்று ஆடெனோசைல்கோபாலமின். இதில் சைனோகோபாலமின் இரண்டு பொருட்களாக உடலில் மாற்றப்படுகிறது. பெரும்பாலும் மெத்தில்கோபாலமின் வடிவ மாத்திரைகள் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வடிவத்தில் விட்டமின் பி12எளிதாக உடலால் உறிஞ்சி கொள்ளப்படுகிறது.

மற்ற மருந்துகள்
இது எளிதாக மருந்து கடைகளிலும் கிடைக்கிறது இந்த மருந்து மாத்திரை, மூக்கு ஸ்பிரே மற்றும் பேட்ச் வடிவில் கிடைக்கிறது. நீங்கள் சீக்கிரம் கருவுற விரும்பினால் வாரத்திற்கு 1000 மைக்ரோ கிராம் அளவில் ஒரு மாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி மாதத்திற்கு ஒரு ஊசி என்றும் கூட விட்டமின் பி12 பற்றாக்குறை உள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம்.

எனவே இந்த வழிகளை மேற்கொண்டு உங்களின் விட்டமின் பி12 பற்றாக்குறையை போக்கி உங்கள் கருவுறுதலை சாத்தியமாக்கலாம்.
இப்போது தெரிகிறதா விந்தணுக்களின் உற்பத்தியும் உறுதியும் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று. நீங்கள் வைட்டமின் பி12 பற்றி கண்டுகொள்ளாமல் அஜாக்கிரதையாக இருக்கிற தவறு தான் உங்களுடைய ஆண்மைத் தன்மைக்கு வேட்டு வைக்கிற விஷயமாக மாறுகிறது.

Post a Comment

0 Comments