#பிறப்புறுப்பின்_தினசரிபராமரிப்பே
#கருப்பை_வாய்_புற்றுநோயைத் #தவிர்க்கும்
👉 பெண்களின் பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம்.
#கருப்பைவாய்புற்றுநோய்
``கருப்பை வாய் புற்றுநோய் வருவதற்கு அந்தரங்க சுத்தமின்மையும் #பாப்பிலோமா #வைரஸும்தான் (papilloma virus) காரணம். பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே, கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இது நிரூபிக்கப்பட்ட உண்மை.
இன்னமும் கழிப்பறை வசதி இல்லாதது, அந்தரங்க உறுப்புகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு இல்லாதது என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.''
👉 எந்தெந்த விதங்களில் எல்லாம் பெண்கள் தங்கள் பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
💊சுத்தமான கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாகக் கழிவறைக்குச் சென்று வந்தபிறகு, பிறப்புறுப்பையும் சேர்த்தே சுத்தம் செய்ய வேண்டும். இதை சோப் பயன்படுத்தித்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. வெறும் தண்ணீரால் சுத்தம் செய்தாலே போதும்... நோய்க்கிருமிகள் அண்டாது.
💊 ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வரும்போது பிறப்புறுப்பைத் தண்ணீரால் சுத்தம் செய்வது ஆகச் சிறந்த நலம். தினமும் படுக்கச் செல்வதற்கு முன்பும் இதைக் கடைப்பிடியுங்கள்.
💊 துணியோ நாப்கினோ... மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை புதியதாக மாற்றிவிடுங்கள்.
💊 கருப்பை வாய் புற்றுநோய் கணவர் வழியாகவும் பரவும் என்பதால், கணவரின் அந்தரங்க உறுப்பைச் சுத்தமாகப் பராமரிக்கச் சொல்லுங்கள். அவர்களும் பிறப்புறுப்பில் சோப் போன்றவற்றை போட்டு அந்த இடங்களை வறட்சி ஆக்கி காயம் ஏற்படுத்திவிட வேண்டாம்
💊 சுத்தத்துக்கு அடுத்தபடியாக கவனமாக இருக்க வேண்டியது தனி மனித ஒழுக்கத்தில். தன் வாழ்க்கை துணையைத் தவிர்த்து, பலருடன் தொடர்பில் இருக்கும் ஆணோ பெண்ணோ... அவர்களாலும் கருப்பை வாய்ப் புற்று நோய் வரலாம்.
💊 ஒரு வேளை உங்களுக்கு, அதிகமாக வெள்ளைப்படுகிறது, அதிலும் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுகிறது, தாம்பத்திய உறவின்போது ரத்தம் கசிகிறது, கிருமித்தொற்று காரணமாக பிறப்புறுப்பில் நமைச்சல் ஏற்படுகிறது, இரண்டு மாதவிடாய்க்கு இடையில் திடீரென்று ரத்தக்கசிவு இருக்கிறது...
போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
⬆👉 இவையெல்லாம் கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்.
🇨🇭 ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், இந்த வகை புற்றுநோயிலிருந்து சுலபமாக மீண்டு வந்துவிடலாம்.''

0 Comments
YOUR COMMENT THANKYOU