Subscribe Us

header ads

தாய்பால் சுரக்காத பெண்கள், வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம்.

♥தாய்பால் சுரக்காத பெண்கள், வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை மேற்கொள்ளலாம். அதிமதுரம் பொடியுடன், சிறிதளவு சர்க்கரை, பால் என மூன்றையும் கலந்து 2 வேலை குடித்து வந்தால், தாய்பால் பெருகும்.

♥குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி, அதனுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும்.

♥பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.

♥பெண்களின் வயிற்று சதை குறைய: சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி, நன்கு மெழுகு போல் அரைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என தினமும் இருவேளை, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

♥காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய் மற்றும் மஞ்சளை அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும். 

♥தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

♥பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால், பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்.

Post a Comment

0 Comments