சிசேரியன் என்பது ஒரு குழந்தையின் பிறப்பு முதல் அந்தத் தாய் மரணிக்கும் வரை அனுபவிக்கக் கூடிய இயலாமை ஆகும்.
பலர் இப்படிச் சொல்வதை நீங்கள் தாராளமாகக் கேட்டிருப்பீர்கள் "சிசேரியன் தானே வயிற்றை வெட்டும் வலி கூடத் தெரியாது!" என்று.
ஆனால் அந்த சிசேரியனில் உடலின் 8 திரைத் தோல்களை வெட்டி குழந்தையை உலகிற்கு கொண்டு வர வேண்டும். பலர் சொல்வதைப் போல வயிற்றை வெட்டும் உணர்வு சிசேரியனுக்கு முன் அடிக்கப்படும் மயக்க மருந்தால் தெரிவதில்லை. ஆனால் சாதாரண ஊசி அல்லாமல் தடிமனான ஊசியின் வழியாக முதுகெலும்பில் செலுத்தப்படும் இந்த முதுகெலும்பு ஊசி பெண்ணின் முதுகில் வாழ்நாள் முழுவதும் வலியை ஏற்படுத்துகிறது.
அந்த மரத்துப் போன ஊசியின் வீரியம் குறைந்த உடன் யாரோ ஒருவர் உங்கள் உடலின் ஒரு பகுதியை பச்சையாக வெட்டிவிட்டு அந்தக் காயத்துக்கு மருந்திடாமல் வைத்திருந்தால் எப்படி இருக்கும்???? அதை விடக் கொடியது அந்த சிசேரியன் வலி, சிசேரியன் செய்த
முதல் 24 மணிநேரம் படுக்கையில் இருந்து திரும்பவே முடியாது, கழிவுகள், சிறுநீர் எப்படி வெளியேறுகிறது என்ற உணர்வே கிடையாது.
பல சேலைன் போத்தல்கள் 24 மணி நேரத்தில் வழங்கப்படுகிறன. தொடர்ந்து அதை உட்செலுத்துத்தும் போது அந்தக் கையின் வலி சொல்லக்கூடியதுமல்ல. இன்னும் எத்தனையோ போராட்டங்களுக்கு மத்தியில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மற்றும் உறவினர்களைப் பார்த்து புன்னகைக்க வேண்டும்.
சி-செக்ஷன் மூலம் குழந்தையை உலகிற்கு கொண்டு வரும் ஒரு பெண் "சாதாரண யோனி பிறப்பு" செய்யும் பெண்களைப் போல தனது குழந்தையுடன் எந்தவிதமான தொடர்பும் அந்த ஓரிரு நாளில் வைத்திருக்க முடியாது தெரியுமா?
உட்கார்ந்திருந்து உடனடியாக எழுந்திருக்க முடியாது. குழந்தையை அணைத்து எடுக்க முடியாது,
எங்களால் கனமான பொருட்களை தூக்க முடியாது,
நீண்ட நேரம் நடக்க முடியாது,
இன்னும் எத்தனையோ அடுக்கலாம்!!!
ஆனாலும் ஒரு பெண்ணாகப் பிறந்ததால் நாங்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு செய்கிறோம்,
இன்னும், சிசேரியன் பிரசவம் தானே அதில் எந்த வருத்தமுமில்லை என்று யாராவது சொல்லும் போது அது சிசேரியன் செய்யப்பட்ட வலியை விடக் கூடுதலாக வலிக்கும்.
எனவே, சாதாரண பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவம் என்ற இரண்டிலுமே அப்படியொரு வலி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆக,
சிசேரியன் செய்யப்பட்ட பெண்களின் உணர்வுகளையும் மதிக்கத் தவறாதீர்கள்.
மீள் பதிவு

0 Comments
YOUR COMMENT THANKYOU