1. கல்சியம், வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து உணவுகள் மற்றும் மாத்திரைகள் கட்டாயம் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. போலிக் ஆசிட் மாத்திரைகள் கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். போலிக் ஆசிட் பச்சை காய்கறிகள், கீரைகள், சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றிலும், கல்லீரல், காராமணி போன்றவற்றிலும் மிகுதியாக காணப்படுகின்றன.
3. சரியான எடையுடன் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்.
4. நோய் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
5. இவற்றை விட முக்கியம், கருத்தரிப்பதற்கு முன் மகப்பேறு மருத்துவரை ஒருமுறை சந்தித்து அவரின் ஆலோசனை பெற வேண்டும்.
கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை
1. ரசாயன வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
2. மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
3. புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை நிறுத்த வேண்டும். புகை பிடிப்பவர் அருகே இருப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
4. மது அருந்தும் பழக்கம் அறவே கூடாது. ஒருவேளை மது அருந்துபவராக இருந்தால் கர்ப்ப காலத்தில் அவற்றை தவிர்க்க வேண்டும்.
மேலே சொன்ன ஆலோசனைகளை சரியான முறையில் பின்பற்றினால் உங்களின் பிரசவ காலம் உங்களுக்கு எந்த வித பயத்தையும் ஏற்படுத்தாது என்பது நிச்சயம்.கருத்தரிப்பதற்க்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டிய ஆலோசனைகள்
நீங்கள் கருத்தரிக்க வேண்டும் என நினைக்கும் பெண்ணா, அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது. குழந்தை பெற்று கொள்ளலாம் என கணவன் மனைவி இருவரும் முடிவு செய்யும் போதே, அது தொடர்பான பல்வேறு பயங்கள், சந்தேகங்கள், தயக்கங்கள் போன்றவை இயற்கையாகவே வந்து விடுகின்றன. உங்கள் கர்ப்பத்தை நீங்கள் சரியாக திட்டமிடுவதன் மூலம் பின்னாளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
கர்பத்திற்க்கு முன் செய்ய வேண்டியவை மற்றும் கூடாதவை
கருத்தரிப்பதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய உடல்நிலை
கருத்தரிக்க நினைக்கும் பெண்ணின் உடல் நிலை எந்த பிரச்சனையும் இல்லாமல் சாதாரணமாக இருந்தால், கருவுற்ற பின் விசேஷ பராமரிப்பு எதுவும் தேவையில்லை. ஆனால், சர்க்கரை நோய், வலிப்பு நோய், இதயநோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, தங்கள் குடும்பத்தின் மருத்துவ பின்னணி, போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் முன், முழு உடல் பரிசோதனை செய்து, அதற்குண்டான மருந்துகள், மருத்துவ ஆலோசானைகள் போன்றவற்றை சரியாக எடுத்துக் கொண்டு, உடலை கருத்தரிக்க ஏற்ற நிலையில் வைத்துக்கொண்ட பிறகே கருவுற நினைப்பது நல்லது. கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் என்னென்ன நினைவில் கொள்ள வேண்டும் என பின்வரும் பதிவுகளில் காண்போம்.
எடை அதிகமாக அல்லது குறைவாக உள்ள பெண்கள்
கருத்தரிப்பதற்கு முன் உடல் எடை மிகவும் குறைவாகவோ, அல்லது மிகவும் அதிகமாகவோ இருந்தால் கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகள் தலைதூக்கலாம். இதனால் சரியான உணவு முறையும், உடல் எடையையும் சரியாக பராமரித்தால் கர்ப்பக் கால பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
பெண்களின் உடல் எடை அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) போன்றவை ஏற்படக்கூடும். உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களுக்கு உண்டாகும் குழந்தைகளும் பெரிய குழந்தைகளாகவே பிறக்கும். குழந்தை பெரிய உருவம் கொண்டிருந்தால் பிறப்புறுப்பின் மூலம் வெளியே வருவது சிக்கலாகி சிசேரியன் செய்தால் தான் குழந்தையை வெளியே எடுக்க முடியும் என்ற நிலை ஏற்படும்.
உடல் எடை குறைவாக இருக்கும் பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எடை குறைவாகவே பிறக்கின்றன. இதனால் பிரசவ நேரத்திலும், பிரசவத்திற்கு பின்னும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
உணவு முறை மற்றும் உடற்பயிற்சி
இவற்றை தவிர்க்க கருத்தரிக்கும் காலத்தில் சரியான உணவு முறையை திட்டமிடுதல் அவசியம். கர்ப்பமான பெண்களுக்கு தோரயமாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் கொண்ட உணவுகள் தேவைப்படுகின்றன. இதற்கு நிறைய பழங்களையும், காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த கொழுப்புடைய பால், தயிர் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அவசியம் செய்ய வேண்டும். தினமும் முடியவில்லை என்றாலும் வாரத்திற்கு 5 நாட்களாவது செய்ய வேண்டும். அப்போது தான் பிரசவம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக இருக்கும்விரைவில் கர்ப்பம் அடைவதற்கு வழிகள் சொல்ல முடியுமா?
1.மருத்துவ பரிசோதனை
திருமணம் முடிந்ததும் தம்பதியர் செய்ய வேண்டிய முதல் வேலை மருத்துவர்களை அணுகுவது தான். தம்பதியர் இருவருமே தங்களை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் தைராய்டு, ஹைப்பர், ஹைப்போ தைராய்டு, கருப்பை நீர்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து குறையிருந்தால் சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ஆண்கள் பரிசோதனைகளையும் சேர்த்து சிகிச்சை தேவைப்படுமா என்பதையும் கலந்து ஆலோசிக்கவும்.
இருவருக்கும் சிகிச்சை தேவையில்லை ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்னும் போது கருத்தரிப்பு விரைவாக இருக்கும். இருவரில் ஒருவருக்கு சிகிச்சை தேவைப்பட்டாலும் முன்கூட்டியே நீங்கள் அணுகுவதால் சிகிச்சை விரைவில் பலனளிக்கும்.
2.கர்ப்பமாவதற்கு, சரியான மாதவிடாய் சுழற்சி இருக்க வேண்டும். அவ்வாறு சரியான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருந்தால், அது இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மாதவிடாய் சுழற்சியை சீராக வைப்பதற்கு, அதற்கேற்ற உணவுகளை முதலில் சாப்பிட வேண்டும்.
* கர்ப்பமடைவதற்கு ஓவுலேசன் (ovulation )தான் சரியான நேரம். எனவே விரைவில் கர்ப்பமடைய வேண்டுமெனில், ஓவுலேசன் நாட்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முயற்சி செய்தால், நிச்சயம் கர்ப்பமடைய முடியும். *
3.ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை தான் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் ஃபோலிக் ஆசிட் குறைவாக இருப்பதால் தான் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆகவே ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள உணவுகளான பச்சை இலைக் காய்கறிகள், பருப்பு வகைகள், சிட்ரஸ் பழங்கள், காராமணி, ப்ராக்கோலி மற்றும் தானியங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், கர்ப்பமடைவதற்கான வாய்ப்பானது அதிகரிக்கும்
4.மருத்துவரின் ஆலோகனையின்படி குடும்ப பந்தத்தில் எப்போது இருக்க வேண்டும் என்று கேட்டு நடந்து கொள்வது நல்லது
5.”அதிக உடல் எடை கூட கர்ப்பத்திற்கு தடை ஏற்படுத்தும். எனவே தினமும் உடல் எடையை சீராக வைக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் எடையை குறைவதோடு, உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, சீரான இரத்த ஓட்டமும் கர்ப்பமாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இவற்றையெல்லாம் சரியாக தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் கர்ப்பமாக முடியும்.
6.உடல் எடை சரியாக இருந்தால் மெதுவான நடைபயிற்சி போதுமானது
7.ப்ரோக்லியில் அதிக ஆன்டி ஆக்சினட்ட் உள்ளது ..மிக சிறந்த காய் வகையாகும்
8.நல்ல தூக்கம் .மனதை இலகுவாக (be relax ,be cool) வைத்திருத்தல்
9.குழந்தை நமக்கு கிடைக்கும் என்ற நேர்மறை சிந்தனைவிரைவில் கர்ப்பம் அடைவதற்கு வழிகள் சொல்ல முடியுமா?

9.குழந்தை நமக்கு கிடைக்கும் என்ற நேர்மறை சிந்தனை
10.கணவன் ,மனைவியாய் கைகோர்த்து நடந்து செல்லுதல் .மனம் விட்டு பேசுதல்..மகிழ்ச்சியாய் ..கவலை மறந்து ..புரிந்துகொண்டு வாழுங்கள் . சீக்கிரம் குழந்தை வரம் கடவுள் அருளால் கிடைக்கும் .
Ovulation என்ற பெண்ணின் கரு முட்டை சுழட்சி பற்றி அறிதல் மிக முக்கியம். பல அண்ட்ராய்டு ஆப் இருகின்ன்றன.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், உங்கள் மாதவிடாய் சுழற்சி எத்தனை நாள் என்று கணக்கு எடுத்தால், அதில் பாதி ovulation நாள் ஆகும் .
எடுத்துகாட்டாக 30 நாள் எனில் 15வது நாள் ovulation day. சிலருக்கு மாறுபடும். ரெகுலராக மாதவிடாய் சுழற்சி இருப்பவர்களுக்கு இது சரியாக இருக்கும்.
இந்த ovulation day அன்று தான் கரு முட்டை முதிர்ச்சி அடைந்து அண்டத்தில் வெளியே வரும், அப்போது ஆண் விந்தணு இருப்பின், கரு உருவாகும். எனவே 14,15 வது நாள் உறவு என்பது இதற்கு சரியாக இருக்கும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU