♥பெண் கர்ப்பம் தரிக்கும் வரை மட்டும் தான் ஆணும் சற்று கஷ்டப்படுகிறான். கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை அனுதினமும் அல்லாடுவது பெண் தான்.
♥1#வாயுத்தொல்லை!
முதல் மூன்று மாத சுழற்சியில் வாயுத்தொல்லை அதிகரிக்கும். இதனால் குடல் மற்றும் செரிமான செயற்திறன் குறைய ஆரம்பிக்கும்.
மேலும், கர்ப்பக் காலத்தில் நீங்கள் உண்ணும் வைட்டமின் மாத்திரைகள் காரணத்தினால் உடலில் வாயு அதிகரிக்கும்.
♥2#சிறுநீர்_கழித்தல்!
மாதவிடாய் தடைப்படுவதற்கு முன்பே, கர்ப்பம் தரித்த பெண்களிடம் சிறுநீர் அதிகரிப்பது ஓர் அறிகுறியாக தென்படும்.
இது, கர்ப்பக் காலம் முழுவதும் தொடரும்.
♥3#உலோக_சுவை!
சில கர்ப்பிணி பெண்களிடம் நாவில் உலோக சுவை தென்படும். இது முதல் மூன்று மாத சுழற்சியின் போது அதிகமாக தென்படலாம். இதனாலேயே உணவின் மீதான ருசி அல்லது ஆசை அவர்களுக்கு குறையும்.
எதுவுமே சாப்பிட முடியவில்லை என கூறுவார்கள்.
♥4#எச்சில்!
காலை எழுந்ததும் உடல்நலக் குறைபாடு, குமட்டல் ஏற்படுவதோடு, எச்சில் அதிகமாக சுரப்பதும் கூட கர்ப்பம் தரித்த ஆரம்பத்தில் வெளிப்படும் ஓர் தர்மசங்கடமான அறிகுறி ஆகும்.
இது முதல் மூன்று மாத சுழற்சியின் போது தான் அதிகமாக இருக்கும்.
♥5#அரிப்பு! காரணமே இல்லாமல் உடலில் ஆங்காங்கே அரிக்கும். முக்கியமாக வயிறு மற்றும் மார்பக பகுதிகளில் அரிக்கும்.
இது கர்ப்பிணி பெண்களுக்கு நேரிடும் மிகப்பெரிய தர்மசங்கடமான விஷயமாகும்.
♥6#முப்பொழுதும்_குமட்டல்!
கர்ப்பம் தரித்த நாளில் இருந்து எல்லா நாட்களும் இந்த குமட்டல் தொல்லை இருக்கும். இது பெரும்பாலும் அனைவரும் அறிந்தது தான்.
காலை, முதல் இரவு வரை இது அடிக்கடி வரும்.
♥7#மூக்கு_சளி_மூக்கடைப்பு போன்றவை ஏற்படும். கர்ப்பக் காலத்தில் சளி அதிகமாக உடலில் உருவாக வாய்ப்புகள் உள்ளன. சில சமயங்களில் கண்களில் கூட நீர் வடியும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU