தாம்பத்தியம் என்றால் என்ன ?.
பளபள விளக்கொளியில்
ஜக ஜக என பட்டும்
பொன்னும் மணியும்
அலங்கரித்தது
ஆயிரம் பேர் மத்தியில்
குத்து விளக்கு குலவிளக்கு என போற்றி
அறை இருட்டில் அனைத்தும் கலைந்து அம்மணத்தில் முடிவதல்ல...
தாம்பத்தயம் என்பது
இரண்டு மனம் கலந்து இல்லறம் இனிக்க
இனவிருத்தியில் துவங்குகிறது.
என் கணவன்
என் மனைவி
என் குடும்பம்
என் பிள்ளைகள்
எங்கள் வாழ்க்கை...
என நடைமுறையாகி
உடல் சேர்க்கையால்
மன சோர்வு நீக்கி
உடல் சுருசுருப்பை தந்து
சந்ததி விருத்தி என பட்டியலிட்டு சுருக்கினால் அதுதான்
தாம்பத்தியம்.

0 Comments
YOUR COMMENT THANKYOU