Subscribe Us

header ads

பள்ளிகளில் செக்ஸ் கல்வி வேண்டுமா; வேண்டாமா என்பது பற்றி நம் நாட்டில் பெரிய விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. ‘

பள்ளிகளில் செக்ஸ் கல்வி வேண்டுமா; வேண்டாமா என்பது பற்றி நம் நாட்டில் பெரிய விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. ‘நாடு கெட்டுப்போயிடும்’ என்று எதிர்க்கும் பலரும், ‘செக்ஸ் கல்வி என்பது ஒரு ஆணும் பெண்ணும் எப்படி இணைவது என்பதை சொல்லித் தருவதுதான்’ என்கிறரீதியில் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். வாத்ஸாயனர் இதைப்போய் சின்ன வயதில் படிக்கச் சொல்கிறாரே என்று அவர்கள் ஷாக் ஆகலாம்! இது விவரம் புரியாத பயம் என்றுதான் நான் சொல்வேன். பள்ளிக்கூடத்தில் டைனமைட், அணு ஆற்றல் பற்றி எல்லாம் படிக்கும் எல்லோருமே, பரீட்சை எழுதி முடித்ததும் வெடிகுண்டுகளையும் அணுகுண்டுகளையும் தயாரித்து, பாகிஸ்தான் மீது போடலாமா என்று வன்முறையில் இறங்கிவிடுவதில்லை. இந்த அடிப்படை அறிவை வைத்துதான் சிலர் கல்லுரியில் மேலும் படித்து, அணு விஞ்ஞானி ஆகிறார்கள். எந்தக் கல்வியும் மோசமானது கிடையாது. அதை எங்கு, எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நன்மையும் தீமையும் விளைகிறது. அந்தக் காலத்தில் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்துவைப்பது வழக்கமாக இருந்தது. மனைவியோடு பழகுவது எப்படி என்பதை அறியாமல், கல்யாணம் செய்துகொள்வதில் என்ன பயன் இருக்கிறது? அதனால்தான் ‘காமசூத்திரம்’ கற்றுக் கொடுத்தார்கள். எல்லையில் எதிரிகள் வந்து முற்றுகையிட்டால், தேர்ந்த ராணுவ வீரர்கள்தானே ஆயுதங்களோடு போர்க்களம் போகிறார்கள். விவசாயிகள் கையில் துப்பாக்கி கொடுத்து அனுப்பினால் விளைவுகள் என்னவாக இருக்கும்.

Post a Comment

0 Comments