Subscribe Us

header ads

திருமணம் முடிந்த முதல் இரவில் செக்ஸ் வைத்துக் கொள்ளுதல் சரியா, தவறா?

திருமணம் முடிந்த முதல் இரவில் செக்ஸ் வைத்துக் கொள்ளுதல் சரியா, தவறா? நீங்க எதிர்பார்த்தது என்ன? உங்களுக்கு நடந்தது என்ன? - இந்த தலைப்புல ஆரோன்னு ஒரு வலைத்தளத்துல விவாதம் நடக்குது.

முதலிரவில் வற்புறுத்தி உறவு கொள்ளுதல், காதலே இல்லாமல் புணர்தல், பெண்ணின் தேவைகளை புரிந்து கொள்ளாமல் தாவுதல் எல்லாம் தப்பு. பெண்ணை முதலில் நேஜிக்கனும் அப்புறமா பூஜிக்கனும் போன்ற வழக்கமான 'Domestic Violence' பற்றி ஆண்களுக்கு எதிரான பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கு. ஆண்கள் செக்ஸ்க்காக ரொம்ப ஏங்குறாங்க, 13,14 வயசுல இருந்தே சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கும் ஒருவன் வாய்ப்பு கிடைச்ச உடனே பாய்வது பெண்களுக்கு துன்பத்தை குடுக்கும் போன்ற டெம்ப்லேட் பதிவுகள் அதிகம்.

இதுல சுவாரஸியமான மேட்டர் என்னன்னா, இப்படி கருத்தை பதிவு செய்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள். ஆண்களே பெண்களின் உணர்வை பற்றியும் பேசினால் சரியா வருமா அப்ரசன்டிகளான்னு யோசிச்சிட்டே படிச்சப்போது.. சில பெண்களின் கருத்தை படிக்க நேர்ந்தது. அதில் அட்ரா சக்கைன்னு சொல்ல வைத்த கருத்து..., " ஏன் நீங்க மட்டும் தான் ஏங்குவீங்களா? எங்களுக்கு உணர்வுகள் இல்லியா முதலிரவுக்கும் ஸ்பரிசத்துக்கும் பெண்கள் காத்திருக்கவே மாட்டாங்கன்னு உங்களுக்கு யார் சொன்னது கூமுட்டைகளா" என்ற கருத்து. 

கொஞ்ச நேரம் பேஸ்தடிச்சு போயிருந்த டெம்ப்லேட் க்ரூப், பதில் சொல்லும் போது அப்படிபட்ட பெண்கள் குத்து விளக்குகள் அல்ல, அவங்க எல்லாம் சோலார் பல்புகள்ன்னு மறுபடி கற்பனையிலேயே பேசிட்டு இருக்காய்ங்க. மொத்தத்துல புரிந்தது, எங்க பெண்கள் பேசிருவாங்களோன்னு முந்திக்கிட்டு இவிங்களே பேசிட்டு இருந்திருப்பாய்ங்க போல... அல்லது பெண்கள் / ஆண்கள் பற்றிய கற்பனை பிம்பங்கள் தான் எதிர்பால் மனதில் இருக்கு. ரியாலிட்டிய தொடுறதுக்கே இருவரும் அஞ்சுகிறார்கள்.

முதல் முறை அனுபவத்தில் குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகவோ அல்லது வெங்கல கடையில் யானை புகுந்ததை கதையாகவோ தான் பலருக்கு ஆரம்பிக்குது. தடுமாறி போகிறார்கள் அல்லது மொத்தமாக குழப்புகிறார்கள். அப்படியும் சேவலும் கோழியுமாக மக்கள் தொகை'ல பின்றோம். முட்டையிடுவதில் மட்டும் குறை இல்லை..

முதல் முறையோ அல்லது 2 குழந்தை பிறந்த பிறகோ.. ஏன் வலிக்கிறது அல்லது ஏன் விறைப்பை என்னால் தொடர்ச்சியாக மெய்ன்டெய்ன் செய்ய முடியவில்லை?? - இது ஆண். நான் ரொம்ப எக்சைடெட்'ஆக இருந்தால் அவரால் செயல் பட முடியாமல் போகிறது நான் எக்சைடெட்'ஆக இல்லை என்றால் அவரால் செயல்பட முடிகிறது ஆனால் எனக்கு வலிக்கிறது என்ன செய்வது - இது பெண். 

இருவருக்குமே காரணம் ஒன்று தான். ஏன் வலிக்கிறது என்ற கேள்விக்கு, காரணம், போதுமான எண்ணெய் சுரக்கவில்லை என்பது தான். அதனால், இருவருக்கும் வலி ஏற்படும். மனம் தயாராக இருந்தாலும் உடல் ஒத்துழைக்காது. இதை இருவரும் புரிந்து கொண்டால் பிரச்சனை எளிதாக தீர்க்கலாம். ஒருவருக்கு பிரச்சனை இருக்கிறது என்றால் மற்றவர் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

விறைப்பை மெய்ன்டெய்ன் செய்ய இயல வில்லை அல்லது பெண் எக்சைட்டட்'ஆக இருக்கும் போது ஆணால் செயல் பட முடியவில்லை என்பது எண்ணெய் அதிகம் சுரப்பதால் ஏற்படும் பிரச்சனை. அதிக ஆர்வம் காரணமாக எண்ணெய் அதிகம் சுரப்பதால் ஆணுக்கு உராய்தல் இன்பம் கிடைக்காது. அதனால் சீக்கிரம் வலுவிழக்க வாய்ப்பு அதிகம். இங்கயும் புரிதல் தான் பிரச்சனை. என்ன ஆனாலும் சரி எடுத்த காரியம் முடிக்காமல் விட மாட்டேன்னு அடம் பிடிக்காம ஒரு சின்ன கேப் விட்டு ரெஸ்ட் ரூம்'ல போய் அதிக எண்ணெய்யை சுத்தம் செய்துவிட்டு ஆரம்பித்தாலே இன்னும் அதிக நேரம் செயல்பட முடியும். இந்த கேப் ஒரு வேளை ஆணுக்கு ஆர்வத்தை குறைத்து இருந்தால், பெண் கொஞ்ச(ம்) நேரம் குடுத்து. மீண்டும் ஆர்வத்தை தூண்டலாம்.

நான் ஆர்வமா இருக்கேன், இவன் சொதப்புறானேன்னு கடுப்படிக்காம சின்ன அட்ஜஸ்ட்மென்ட்ல கூடுதலா எஞ்சாய் பண்ண வாய்ப்பேற்படுத்திக்கலாம். இருவரும் ஒரே மாதிரியான 'மைன்ட்செட்டில்' ஈடுபட்டால் இன்பம் பொதுவானது. ஒருத்தருக்கு விருப்பம் இல்லை என்றாலும் மற்றவர் புரிந்து கொள்ளுதல் மேலும் இன்பம் பயக்கும். மற்றவரை தயார் செய்வது எல்லாம் கலை.. கலையை கற்க சிறிது சிரமப்படனும். சித்திரமும் 'கை' பழக்கம். செந்தமிழும் 'நா' பழக்கம். 

புரிந்தவன் கபாலி.. ;)

மொத்தத்துல ஃபேஸ்புக் போன்ற சமூக வெளியில கிடைத்திருக்கிற சுதந்திரத்தை ஒரு ஃபேக் ஐடி' வைத்துக் கொண்டாவது தப்பறைஞ்சா தான் பெண்களின் உணர்வு வெளியே தெரியும். இல்லேன்னா இன்னும் பல காலத்துக்கு ஆண்கள், கற்பனையில் இருக்கும் பிம்பத்தோடு காதல் புரிந்து, நிஜத்துடன் சொதப்புவார்கள்.

Post a Comment

0 Comments